5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

UK Election 2024 : கையில் பகவத் கீதை.. பிரிட்டன் எம்.பி.யாக பதவியேற்ற இந்திய வம்சாவளி பெண்!

Britain MP Shivani Raja | பிரிட்டனின் எம்.பி ஆக பதவி ஏற்றுள்ளார் 29 வயதே ஆன ஷிவானி. பிரிட்டனில் லெய்சிஸ்டர் கிழக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷிவானி, கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். இந்திய வம்சாவளியான ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

UK Election 2024 : கையில் பகவத் கீதை.. பிரிட்டன் எம்.பி.யாக பதவியேற்ற இந்திய வம்சாவளி பெண்!
ஷிவானி ராஜா
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Jul 2024 16:08 PM

பிரிட்டன் அதிபர் தேர்தல் : பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான ஷிவானி எம்.பி ஆக பதவியேற்றுக்கொண்டார். பிரிட்டனில் கடந்த ஜுலை 4 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜூலை 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தோல்வியை தழுவிய நிலையில், தொழிலாளர் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. அதுவரை கன்சர்வேடிவ் கட்சியின் கைவசம் இருந்த பிரிட்டன், அதிபர் தேர்தல் மூலம் தொழிலாளர் கட்சியின் வசம் சென்றுவிட்டது. பிரிட்டனில் மொத்தம் 650 தொகுதிகளில் உல்ள நிலையில், தொழிலாளர்ப் கட்சி சுமார் 412 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தொழிலாளர் கட்சி வெறும் 211 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி பிரிட்டனின் புதிய பிரதமராகும்  தகுதி பெற்றார் கெய்ர் ஸ்டார்மர்.

பிரிட்டன் எம்.பி ஆக பதிவியேற்ற இந்திய வம்சாவளி பெண்

பிரிட்டன் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தோல்வியை தழுவினாலும், பல இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் பிரிட்டனின் எம்.பி ஆக பதவி ஏற்றுள்ளார் 29 வயதே ஆன இளம் தொழிலதிபர் ஷிவானி. பிரிட்டனில் லெய்சிஸ்டர் கிழக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷிவானி, கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். இந்திய வம்சாவளியான ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி ஷிவானி ராஜா 14,526 வாக்குகள் பெற்ற நிலையில், லண்டனின் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. ஜோ பைடன் திட்டவட்டம்!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 27 இந்திய வம்சாவளியினர்

கடந்த சில ஆண்டுகளாக லெய்சிஸ்டர் கிழக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி நுழைய முடியாமல் இருந்தது. இந்நிலையில் சுமார் 37 ஆண்டுகள் கழித்து கன்சர்வேடிவ் கட்சியின் நிலையான ஆட்சியை ஷிவானி முறியடித்துள்ளார். ஷிவானியை தவிர மொத்தம் 27 இந்திய வம்சாவளியினர் தேர்தலில் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இதையும் படிங்க : விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடிய ஆராய்ச்சியாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் பகவத் கீதையின் ஆணையாக லெய்சிஸ்டர் கிழக்கு தொகுதியின் எம்.பி ஆக பதிவேற்றார் ஷிவானி. இதனை தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், லெய்சிஸ்டர் கிழக்கு தொகுதியை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரிநித்துவம் செய்வது பெருமைக்குறியது என்று பதிவிட்டுள்ளார்.

Latest News