Viral Video : அல்பேனியாவில் நிற வெறிக்கு ஆளான இந்திய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Racism | இந்தியாவில் சாதிய ரீதியான பாகுபாடுகள், பிளவுகள் உள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நிற வெறி தலைவிரித்தாடுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணராத மக்கள் தங்களுக்கு பிரிவினைகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் வேகமாக முன்னேறி வரும் சூழலில், இத்தகைய பிரிவினைகளும், பாகுபாடுகளும் வேகமாக காணாமல் போய்விடும் என நம்ப படுகிறது. ஆனாலும், பல்வேறு இடங்களில் பிரிவினை காரணமாக அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைகின்றன.
நிற வெறியை எதிர்க்கொண்ட பெண் : மனிதர்கள் ஒரே மாதியான தோற்றம், உடல் அமைப்பு, செயல்திறன், வாழ்க்கை முறை ஆகியவற்றை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரே குழுவாக வாழ்வதில்லை. அவர்கள் தங்களுக்கு பிரிவினைகளை ஏற்படுத்துக்கொள்கின்றனர். உலகில் ஒவ்வொரு நில பரப்பிலும் வெவ்வேறு விதமான வேற்றுமைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் சாதிய ரீதியான பாகுபாடுகள், பிளவுகள் உள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நிற வெறி தலைவிரித்தாடுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணராத மக்கள் தங்களுக்கு பிரிவினைகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் வேகமாக முன்னேறி வரும் சூழலில், இத்தகைய பிரிவினைகளும், பாகுபாடுகளும் வேகமாக காணாமல் போய்விடும் என நம்ப படுகிறது. ஆனாலும், பல்வேறு இடங்களில் பிரிவினை காரணமாக அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைகின்றன. அதேபோல தான் அல்பேனியாவில் இந்திய பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வாஷிங் மெஷினில் மறைந்திருந்த 5 அடி நீள ராஜநாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அல்பேனியாவில் நிற வெறியை எதிர்க்கொண்ட இந்திய இளம் பெண்
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் அல்பேனியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு அவர் நிற வெறியை எதிர்க்கொண்டுள்ளார். அந்த பெண் நிறம் குறைவாக இருந்ததன் காரணமாக அந்த இசை கச்சேரியில் இருந்த சில பெண்கள், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இது குறித்து அந்த பெண் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Female Indian tourist is told to “Go back to India” by local girls at an Albanian Music festival. pic.twitter.com/8kJcsYSHd7
— Posts By Feds (@SuspectFed) August 20, 2024
அல்பேனியா எனக்கு சிறந்த வரவேற்பை தந்துள்ளது, நன்றி – பாதிக்கப்பட்ட பெண்
அவர் பேசி பதிவிட்டுள்ள வீடியோவில், நான் அல்பேனியாவில் இசை கச்சேரியை காண வரிசையில் நின்றுக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென என் எதிரே வந்த 4 பெண்கள் என்னை தகாத வார்த்தையில் பேசினர். அதுமட்டுமன்றி அவர்கள் என்னை எனது நாட்டிற்கு திரும்பி செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தினர். அல்பேனியா எனக்கு சிறப்பான வரவேற்பை வழங்கியுள்ளது. நன்றி அல்பேனியா என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு.. காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பல்வேறு இந்தியர்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.