PM Benjamin Netanyahu: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி..
கைது வாரண்டுகளுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச சமூகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், ஜூலை மாதம் காசா மீதான வான்வழி தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) நீதிபதிகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ஃப் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் போது இந்த தலைவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐசிசி கூறியுள்ளது. நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டும் மறுத்துள்ளன.
🟡 BREAKING: The ICC issued arrest warrants for Israeli Prime Minister Benjamin Netanyahu and former Defense Minister Yoav Gallant for crimes against humanity and war crimes against the Palestinian people. This is the first time the ICC has ever targeted a close ally of the US. pic.twitter.com/GBxfAo9she
— red. (@redstreamnet) November 21, 2024
அத்தகைய வாரண்டுகளுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச சமூகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், ஜூலை மாதம் காசா மீதான வான்வழி தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி.. பிரதமரின் புதிய சாதனை..
இது தொடர்பான அறிக்கையின்படி, பாலஸ்தீனிய குடிமக்களை வேண்டுமென்றே கொல்லுமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டதற்காகவும், சர்வதேச மனிதாபிமான உதவிகள் காசாவை அடையாமல் தடுத்ததற்காகவும் பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றவாளிகள் என்று ஐசிசி கண்டறிந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீனிய குடிமக்களை போரின் சாக்கில் கொன்று குவித்ததை நீதிமன்றம் தனது விசாரணையில் கண்டறிந்தது மேலும், காசாவை அழிக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்ட ஐகோர்ட் நீதிபதிகள் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க முடிவு செய்தனர்.
முடிவின் விளைவு என்னவாக இருக்கும்?
Dearborn will arrest Netanyahu & Gallant if they step within Dearborn city limits.
Others cities should declare the same. Our president may not take action, but city leaders can ensure Netanyahu & other war criminals are not welcome to travel freely across these United States. pic.twitter.com/eHS8oSMuqt
— Abdullah H. Hammoud (@AHammoudMI) November 21, 2024
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் மீதான தனது முடிவை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பும். அதன் உத்தரவு உறுப்பு நாடுகளுக்கு ஒரு அறிவுரை மட்டுமே என்றாலும், அவர்கள் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இதன் பின்னணியில் உள்ள தர்க்கம் என்னவென்றால், ஒவ்வொரு நாடும் அதன் உள் மற்றும் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்க சுதந்திரமாக உள்ளது. இந்த காரணத்திற்காக, மற்ற சர்வதேச அமைப்புகளைப் போலவே, ஐசிசியும் இதை ஏற்றுக்கொள்கிறது.
Also Read: பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்.. 40 பேர் உயிரிழப்பு..
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் நடந்த இனப்படுகொலை வழக்குகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதையும் மீறி புடின் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.