Iran Attacks Israel Updates: இஸ்ரேல் – ஈரான் சண்டை.. அக்டோபர் 2ல் நடந்தது என்ன?
Iran Attacks Israel: இஸ்ரேலை கண்டிப்பாக பழிவாங்கும் என ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஈரான் அரசு ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
தற்போது உலக நாடுகளையெல்லாம் பதட்டத்தில் வைத்துள்ளது இஸ்ரேல் – ஈரான் சண்டை. முன்னதாகவே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் அது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் ராணுவத்தினர் கொலை செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ஈரான் தங்கள் மண்ணின் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைக்கு பழி தீர்ப்போம் என சூளுரைத்தது. ஆனால் இதுவரை இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது. இப்படியான நிலையில் கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி ழி தாக்குதலில் ஹிஸ்தான்புல் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்படவே இஸ்ரேலை கண்டிப்பாக பழிவாங்கும் என ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஈரான் அரசு ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
LIVE NEWS & UPDATES
-
அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் சந்திப்பு!
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து, அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து பேசிய அயதுல்லா அலி கமேனி!
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எதிர்வினை ஆற்றியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இருப்பதை அவர் கண்டித்துள்ளார். அவர்களின் இருப்பு மத்திய கிழக்கில் மோதல், போர், பதட்டம் மற்றும் விரோதப் போக்கை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
-
ஹிஸ்புல்லாவின் சுமார் 150 இலக்குகளை தாக்கிய இஸ்ரேல்!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகளுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹிஸ்புல்லாவுடன் நெருக்கமான போரில் ஈடுபட்டுள்ளதாக IDF கூறுகிறது. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. சமீபத்திய நடவடிக்கையில், ஒரு கமாண்டோ பிரிவு ஹிஸ்புல்லாவின் மறைவிடத்தை அழித்தது. அதில் ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடிபொருட்களின் சேமிப்புக் கிடங்கு இருந்தது. ஹெஸ்புல்லாவின் 150க்கும் மேற்பட்ட நிலைகளை விமானப்படை தாக்கியுள்ளது என்று கூறியுள்ளது.
-
தெற்கு லெபனானுக்கு படைகளை அனுப்பும் இஸ்ரேல்!
தெற்கு லெபனானில் உள்ள சுமார் 24 கிராமங்களை காலி செய்யுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளதால் இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.
-
பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தும் இஸ்ரேல்!
தெற்கு லெபனானில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் உங்களுக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை, உங்களின் பாதுகாப்புகாக உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று தெரிவித்துள்ளது.
-
லெபனானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் ஸ்பெயின்!
லெபனானில் வசிக்கும் ஸ்பானியர்கள் சுமார் 350 பேரை நாளை வெளியேற்ற உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புதுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்பானிஷ் விமானங்கள் தயாராக உள்ளதாகவும், பணியாளர்கள் தயாரக உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஈரான் தாக்குதலை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
ஈரான் தாக்குதலை அடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்ட தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரான் தாக்குதலை அடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்துல்கலாம் சாலையை முற்றிலுமாக பேரிகார்டுகள் போட்டு மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
-
அனைத்து விமானங்களையும் ரத்து செய்த ஈரான்!
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வான்வழியை மூடியது ஈரான். அதன்படி, நாளை காலை வரை ஈரானின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தகூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய விமான நிறுவனங்களுக்கு அரசு ஆலோசனை?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில், இந்திய விமான நிறுவனங்களிடம் அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி டெல்லியில் இருந்து லண்டனுக்கு செல்லும் விமானம், ஈரானை ஒட்டி செல்வதால் விமான பாதையில் மாற்றம் செய்ய ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
நாடாளுமன்ற கொண்டாட்டம் வீடியோ
ஈரான் நாடாளுமன்ற கொண்டாட்டம்
Celebration in the Iranian parliament after the missile strike on the Israeli occupation sites. #Tehran #Iran @qudsn pic.twitter.com/W1oZIKaAPP
— ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) October 2, 2024
-
ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டாட்டம்
இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து ஈரான் பாராளுமன்றத்தில் கொண்டாட்டம் . நேற்றிரவு நடந்த தாக்குதலை அடுத்து, ஈரான் மற்றும் லெபனானில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
-
இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் – கெஜ்ரிவால் அறிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது, இந்தியாவில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த நாடுகளில் வேலை செய்வதால் கவலையடைந்துள்ளனர். அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மிஷன் முறையில் விரைவில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இந்திய அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்நாடுகளின் நிலைமை விரைவில் சீரடைந்து உலகில் அமைதி நிலவும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்
-
வெளியேறும் சீன மக்கள்
லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட 146 சீன குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் விமானம் மூலம் பெய்ஜிங்கை அடைந்தனர்.
-
இஸ்ரேலிய தூதரகம் அருகே 2 குண்டுவெடிப்புகள்
டென்மார்க்கில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே இரண்டு வெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோபன்ஹேகன் போலீசார் தெரிவித்தனர்.
-
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், உள்கட்டமைப்பை அழிப்போம்: ஈரான்
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் அனைத்து உள்கட்டமைப்புகளும் அழிக்கப்படும் என ஈரானின் தலைமை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
-
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம்
இஸ்ரேல் – ஈரான் போரை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கண்டித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
புட்டினுடன் பேச நெதன்யாகு முயற்சி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் தாக்குதலை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேச முயற்சி செய்ததாக தகவல். ஈரான் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. நெதன்யாகுவுடன் பேச புடின் மறுத்துவிட்டார் எனவும் தகவல்
-
காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் பலி
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் WFA தெரிவித்துள்ளது.
-
ஈரானுக்கு பதிலடி உண்டு – இஸ்ரேல்
ஈரானின் தாக்குதல் ஒரு கடுமையான மற்றும் ஆபத்தான தொடக்கம். பின்விளைவுகள் கண்டிப்பாக இருக்கும். கண்டிப்பாக இஸ்ரேல் பதிலளிப்போம் – இஸ்ரேல்
“Iran’s attack is a severe and dangerous escalation. There will be consequences…We will respond wherever, whenever and however we choose, in accordance with the directive of the government of Israel.”
Watch IDF Spokesperson RAdm. Daniel Hagari regarding Iran’s large-scale… pic.twitter.com/A8pyC7eawI
— Israel Defense Forces (@IDF) October 1, 2024
-
இஸ்ரேல் மீது விழுந்த 200 ஏவுகணை- ஈரான்
இஸ்ரேல் மீது ஈரான் 200 ஏவுகணைகளை வீசியுள்ளது. இதை அரசு தொலைக்காட்சி இன்று உறுதி செய்தது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரானுக்கு “பணம் கொடுக்க” இஸ்ரேல் சபதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இஸ்ரேல் ராணுவம் 180 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை வானிலேயே அழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தது.
-
லெபனானில் இஸ்ரேல் 5 தாக்குதல்கள்
இன்று காலை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் குறைந்தது ஐந்து இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்ததாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறிய இஸ்ரேலிய ராணுவம், பலரை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
#UPDATE At least five Israeli strikes hit Beirut’s southern suburbs early Wednesday, a Lebanese security source says.
The Israeli military said it was targeting Hezbollah sites and issued several evacuation orders. @AFP correspondents heard multiple explosions and saw smoke… pic.twitter.com/RWHe1R2gp0
— AFP News Agency (@AFP) October 2, 2024
-
ஈரானுக்கு ஜப்பான் பிரதமர் கண்டனம்
பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவும் இஸ்ரேலைத் தாக்கியதற்காக ஈரானைக் கண்டித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று பிரதமர் ஷிகெரு இஷிபா கூறினார்.
-
ஈரான் அதற்கான விலையை கொடுக்க வேண்டும் – நெதன்யாகு
ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் தாக்குவோம். “இன்றிரவு ஈரான் ஒரு பெரிய தவறைச் செய்தது – அதற்கான விலையை அது செலுத்த வேண்டும்” என்றார்.
-
இது எங்கள் பலத்தின் ஒரு பகுதி மட்டுமே – எச்சரிக்கை
ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது எங்கள் பலத்தின் ஒரு பகுதி மட்டுமே என்றும், ஈரானுடன் எந்த வித மோதலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்
-
Iran Attack Israel : வெள்ளை மாளிகை தகவல்
வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைரன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
-
ஜோ பைடன் உத்தரவு
இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்கு உதவுமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.