Iran President: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு! - Tamil News | | TV9 Tamil

Iran President: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு!

Updated On: 

20 May 2024 09:58 AM

Iran President Ebrahim Raisi Dies: ஹெலிகாப்டர் விபத்து நடந்து சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரான் அதிபருடன் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Iran President: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு!

ஈரான் அதிபர் உயிரிழப்பு

Follow Us On

ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு: மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நாடாக ஈரான் விளங்குகிறது. இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டின் அதிபராக இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் நேற்று மலையில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து நடந்து சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரான் அதிபருடன் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : சிங்கப்பூரின் 4வது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வாங்.. அமைச்சரவையில் இடம்பெற்ற இந்தியர் யார்?

விபத்து நடந்தது எப்படி?

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இருநாடுகளும் இணைந்து கட்டிய 3வது அணையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ் உடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரான் கிழக்கு அஜர்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபர் ரைசி நாடு திரும்பினார். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட பலர் பயணம் செய்தனர்.

அப்போது, ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப் படையினரின் ஹெலிகாப்டரை தரையிறக்கி, பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்றது.

ஆனால், கடும் பனிமூட்டம் காரணமாக தோல்வி அடைந்தது. விபத்து நடந்தது வனப்பகுதி மற்றும் மலைப்பாங்கான பிராந்தியம் என அந்நாட்டு அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், உடலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை அடுத்து, ஹெலிகாப்டர் விழுந்து வெடித்து சிதறியதாக கூறப்படும் துருக்கியின் ஆளில்லா விமானம் ஒன்றுதான் கண்டுபிடித்தது. தொடர்ந்து, ஈரான் அதிபரின் மரண செய்தி சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read :  சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் மாஸ்க் கட்டாயம்!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version