இஸ்ரேலை பரம எதிரியாக கருதிய ரைசி.. ஈரானின் அடுத்த அதிபர் யார்? - Tamil News | | TV9 Tamil

இஸ்ரேலை பரம எதிரியாக கருதிய ரைசி.. ஈரானின் அடுத்த அதிபர் யார்?

Updated On: 

20 May 2024 11:19 AM

ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரைசி கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரைசி இறந்ததை அடுத்து, அந்நாட்டின் துணை அதிபரான முகமது மொக்பர் இடைக்கால அதிபராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த 50 நாட்களுக்குள் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலை பரம எதிரியாக கருதிய ரைசி.. ஈரானின் அடுத்த அதிபர் யார்?

ஈரான் அதிபர் ரைசி

Follow Us On

இஸ்ரேல்-ஈரான் உறவு: கடந்த சில காலமாகவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே, காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல் ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சூழலில், கடந்த மாதத்தில் இருந்தே ஈரான் இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பெரும் பதற்றத்தை கிளப்பியது. ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 2 ஜெனரல் உள்பட 12 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், கடும் கோபமடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலை நோக்கி 200க்கும் அதிகமான ட்ரோன் மற்றும் ஏவுகணை அனுப்பி சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இஸ்ரேலுக்கு ஈரான் பகையை கொண்டுள்ள நிலையில், இஸ்ரேலுடனான அஜர்பைஜானின் உறவு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால், ஈரான் அஜர்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் உடனான மோதல் வெடித்தபோது, அணுகுண்டு தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை என ஈரான் தெரிவித்தது.  இப்படியான நிலையில் தான், அணை திறப்பி நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாக பங்கேற்று திரும்பி வரும் தான் விபத்தில் உயிரிந்தார்.

Also Read : Iran President: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு!

போருக்கு இடையே மரணம்:

இப்படியான சூழலில் தான், ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் நேற்று மலையில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து நடந்து சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரான் அதிபருடன் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானுக்கு இஸ்ரேலுக்கு இடையேயான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ரைசி மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கக்கூடும் என்று மூத்த தலைவர்கள் கருதுகின்றன. இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்தில் இஸ்ரேல் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்தும் தெரிவிக்கவில்லை.

அடுத்த அதிபர் யார்?

ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரைசி கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரைசி இறந்ததை அடுத்து, அந்நாட்டின் துணை அதிபரான முகமது மொக்பர் இடைக்கால அதிபராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த 50 நாட்களுக்குள் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஈரான் ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், அரசியில், பொருளாதார பிரச்னை, கருத்து வேறுபாடுகளுடக்கு இடையில் ரைசியின் மரணம் நிகழ்ந்துள்ளது.

Also Read : சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் மாஸ்க் கட்டாயம்!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version