Israel: ”தேவைப்பட்டால் ஆக்ஷன் தான்”.. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அயதுல்லா அலிகமேனி எச்சரிக்கை!
ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதிகளில் தினம்தோறும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பை முழுவதும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக செப்டம்பர் மாத இறுதியில் லெபனான் மீது மிகப்பெரிய வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கள் மண்ணில் நிகழ்ந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்தான்புல் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா படுகொலைக்கும் பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு ஈரான் அரசு தாக்குதல் நடத்தியது. இதற்ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதிகளில் தினம்தோறும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பை முழுவதும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக செப்டம்பர் மாத இறுதியில் லெபனான் மீது மிகப்பெரிய வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளிலேயே போர் பதற்றம் நிலவி வருகிறது.
அதே சமயம் இந்த தாக்குதலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் லெபனான் சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 151 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்தான்புல் அமைப்பினர் வடக்கு இஸ்ரேலில் உள்ள இலானியா இராணுவ தளத்தை ராக்கெட்டுகளால் காலை 10:20 மணிக்கு குண்டுவீசித் தாக்கியதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே இன்று நடைபெற்ற தொழுகைக்குப் பின்னர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் இருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி, “பிரிவினை மற்றும் தேசத்துரோக விதைகளை விதைத்து, அனைத்து இஸ்லாமியர்கள் இடையே பிரிவினையை உண்டாக்குவது தான் நமது எதிரியின் கொள்கைகளாக உள்ளது. ஈரானின் எதிரி பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் எதிரி என அவர் தெரிவித்துள்ளார்.தனது நிலத்தை ஆக்கிரமித்து வாழ்வை நாசம் செய்த எதிரியை எதிர்த்து நிற்க பாலஸ்தீன தேசத்துக்கு உரிமை உண்டு. மேலும் நாங்கள் எங்கள் கடமையை நிறைவேற்றுவதில் தாமதிக்கவோ அவசரப்படவோ இல்லை.நாங்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக எடுக்கும் முடிவுகள் சரியான நேரத்தில் செய்யப்படும்” என இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிப்பிட்டு அலி கமேனி பேசியுள்ளார்.
Also Read: Viral Video : போரின் நடுவே நடனமாடிய காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ!
அவர் உரையாற்றும்போது மேடையில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் ஹிஸ்தான்புல் அமைப்பின் கொடி மற்றும் பாலஸ்தீனத்தின் கொடியை கையில் பிடித்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடையாள இறுதிச்சடங்கு நடைபெற்றது. இப்படியான நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சராக உள்ள அப்பாஸ் அராக்சி பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரின் லெபானான் பயணம் அத்துமீறிய செயல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய இராணுவம் பெய்ரூட் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தது.
நேற்றைய தினம் லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்த மக்களை உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. தொடர்ந்து காஸாவில் உள்ள வடமேற்கு கரை முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், லெபனான் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்கு கத்தார் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் லெபனானுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.