5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Iran Israel War: மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்.. பணவீக்கம் குறித்து முற்றுபுள்ளி வைத்த அமெரிக்கா..

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் அடுத்த கட்டத்தை அதாவது 100 டாலரை நெருங்கும் என எதிப்பார்க்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்கா பதிலளித்துள்ளது. ஈரான் இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக பணவீக்கம் ஏற்பட அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.

Iran Israel War: மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்.. பணவீக்கம் குறித்து முற்றுபுள்ளி வைத்த அமெரிக்கா..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 03 Oct 2024 08:32 AM

கடந்த ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது யாரும் எதிர்பாராத விதமாக வான்வழி தாக்குதலை நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் காசாவையும் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலில் சுமார் 43 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக சீரழிந்து போனது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டங்கள் தெரிவித்த நிலையில் இஸ்ரேல் அதை விட்டு நீங்கவில்லை. தொடர் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

லெபனானில் இருந்தப்படி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியது. இதன் காரணமாக இரு நாட்டிற்கும் இடையே மிகப்பெரிய போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில் நேற்றைய தினம் யூத புத்தாண்டை முன்னிட்டு இஸ்ரேல் பிரதம் நெதன்யாகு இந்த ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமையும் என குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் நடைபெற்று வரும் தரைப்படை தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய இராணுவம் லெபனான் பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Bachoura சுற்றுப்புறத்தில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதலை துல்லியமாக நடத்தியது. இந்த தாக்குதல்கள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் அடுத்த கட்டத்தை அதாவது 100 டாலரை நெருங்கும் என எதிப்பார்க்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்கா பதிலளித்துள்ளது. ஈரான் இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக பணவீக்கம் ஏற்பட அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே என்னதான் பிரச்னை? போர் நடக்க என்ன காரணம்.. முழு விவரம்!

அமெரிக்காவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. உலகிற்குத் தேவைப்பட்டால், அது தனது பங்குகளை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், உலகின் 22 எண்ணெய் உற்பத்தியாளர்களின் அமைப்பான OPEC + உலகிற்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. ஒபெக் பிளஸ் உறுப்பினர்களும் டிசம்பரில் விநியோக உற்பத்தியை அதிகரிக்கும் தங்கள் திட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட திட்டம் அப்படியே இருக்கும்.

அக்டோபர் 1ம் தேதி, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியதும், கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வு காணப்பட்டது. அக்டோபர் 2ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலர்களைத் தாண்டியது.

மத்திய கிழக்கில் குறிப்பாக ஈரான், இஸ்ரேல் இடையே எவ்வளவு பதற்றம் அதிகரித்தாலும், வரும் நாட்களில் அதே அளவு கச்சா எண்ணெய் விலை உயர்வு உலகில் காணப்படாது என்பது தெளிவாகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் ஆரம்ப நாட்களில் காணப்பட்டது. அதன்பிறகு, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தின் போது கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது.

மேலும் படிக்க: ” இந்த ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமையும்” – யூத புத்தாண்டில் வாழ்த்து கூறிய பிரதமர் நெதன்யாகு..

கச்சா எண்ணெயின் விலைகளைப் பற்றி நாம் பேசினால், வளைகுடா நாடு மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலையில் உயர்வு காணப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.47 சதவீதம் அதிகரித்து 74.64 டாலராக உள்ளது. மறுபுறம், அமெரிக்க கச்சா எண்ணெய் விலையில் 0.39 சதவீதம் அதிகரித்து, விலை பீப்பாய்க்கு 70.10 டாலராக உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, மத்திய கிழக்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெய் விலையில் மேலும் ஏற்ற இறக்கங்கள் அடுத்த சில நாட்களில் காணப்படலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News