5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Benjamin Netanyahu: லெபனானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டில் தாக்குதல்!

Israel-Hamas War: இன்று காலை ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களில் ஒன்று சிசேரியாவில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தை குறிவைத்து தாக்கியதாக சவுதி செய்தி சேனல் அல்ஹதத் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இதில், தாக்குதலுக்கு இலக்கான கட்டிடம் நெதன்யாகுவின் வீட்டின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

Benjamin Netanyahu: லெபனானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டில் தாக்குதல்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Image: getty and twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 19 Oct 2024 14:51 PM

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ப்ரைவேட் இல்லத்தை குறிவைத்து ஹில்புல்லா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. பிரதமர் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள ஹெஃபாபின் சிசேரியா பகுதியில் இன்று காலை வெடிச்சத்தம் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் இரு கட்டிடத்தை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ அல்லது அவரது மனைவியோ அங்கு இல்லை என்றும், இந்த தாக்குதலில் எந்த சேதமும் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ALSO READ: Diwali 2024: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்!

என்ன நடந்தது..?


இன்று காலை ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களில் ஒன்று சிசேரியாவில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தை குறிவைத்து தாக்கியதாக சவுதி செய்தி சேனல் அல்ஹதத் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இதில், தாக்குதலுக்கு இலக்கான கட்டிடம் நெதன்யாகுவின் வீட்டின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த போது நல்ல வேளையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் இல்லை என்றும், இந்த தாக்குதலில் யாருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் சிசேரியாவை தாக்கிய ஆளில்லா விமானத்தை தவிர, லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளி தாக்குதல் நடந்த நுழைந்த இரண்டு ஆளில்லா விமானங்களை இஸ்ரேலிய இராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. இதனால் பெரும் சேதம் தடுத்து நிறுத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர் தாக்குதல்:

காலையிலேயே, டிபீரியாஸ் மற்றும் இஸ்ரேலின் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து லெபனானில் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் தொடங்கின. பல ராக்கெட்டுகள் கலீசியா கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், டெல் அவிவ் மற்றும் நகரின் வடக்குப் பகுதிகளிலும் ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும், ஆனால், எங்கு வெடிப்புகள் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த ஒரு மணி நேரத்தில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், மற்றொரு ஆளில்லா விமானமே சிசேரியா பகுதியில் உள்ள கட்டிடத்தை தாக்கியது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சம்பவத்தின்போது, பாதுகாப்பு சைரன்கள் ஒலிக்கப்பட்டன” என்று தெரிவித்திருந்தது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சின்வார், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அதிரடி நடவடிக்கையால் அழிக்கப்பட்டார். அதேபோல், இந்த வார தொடக்கத்தில் காசாவின் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.

ALSO READ: தமிழ் எங்கள் மூச்சு.. ஆனால் உங்க வரலாறு?.. ஆளுநரை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

சின்வாரின் மரணத்திற்குப் பிறகு பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர், ஹமாஸின் அனைத்து உயர்மட்டத் தளபதிகளும், ஹெஸ்புல்லாவின் உயர்மட்டத் தலைமையும் இஸ்ரேலிய இராணுவத்தால் அழிக்கப்பட்டனர். மேலும், இஸ்ரேலுடனான போர் தொடரும் என்றும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் கூறி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் ஹிஸ்புல்லாஹ்வினால் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.” என தெரிவித்தார்.

Latest News