Israel Hamas War: பெரிய தலை காலி? இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. நிலைகுலைந்த ஹமாஸ் - Tamil News | israel hamas war chief yahya sinwar killed in gaza strike checking says Israel army tamil news | TV9 Tamil

Israel Hamas War: பெரிய தலை காலி? இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. நிலைகுலைந்த ஹமாஸ்

இஸ்ரேல் ஹமாஸ் போர்: வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், யாஹ்யா சின்வார் என்பதை உறுதிப்படுதத மரபணு பரிசோதனை நடைபெற்று வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Israel Hamas War: பெரிய தலை காலி? இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. நிலைகுலைந்த ஹமாஸ்

ஹமாஸ் தலைவர் (PTI/ANI)

Updated On: 

17 Oct 2024 21:08 PM

வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கும் கடந்த ஒரு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.  கடந்த ஆண்டு அக்டேபார் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணை தாக்குதல் பாலஸ்தீன ஆதரவு படையான ஹமாஸ் நடத்தியது. 20 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹமாஸ் படை. இந்த நிகழ்வுதான் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவுக்கு பதற்றத்திற்கு காரணம்.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு?

இந்த தாக்குதலில் இஸ்ரேலின் 12,000 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் வான்வழி, தரைவழி என அதிக தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்தது. இஸ்ரேல் ஹமாஸ் படை தாக்குதலில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கலாம்.

இந்த போரினை நிறுத்த உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. மாறாக லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்தது. இப்படியான சூழலில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: ”ஆதாரம் இல்லை” ஹர்தீப் சிங் கொலையில் பின்வாங்கிய கனடா.. இந்தியா எடுத்த அதிரடி மூவ்!

தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு காசாவில் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

During IDF operations in Gaza, 3 terrorists were eliminated. The IDF and ISA are checking the possibility that one of the terrorists was Yahya Sinwar. At this stage, the identity of the terrorists cannot be confirmed.

In the building where the terrorists were eliminated, there…

— Israel Defense Forces (@IDF) October 17, 2024

3 மாதங்களில் மூன்று தலைவர்கள் உயிரிழப்பு:

இதில் ஒருவர் யாஹ்யா சின்வார் என்பதை உறுதிப்படுதத மரபணு பரிசோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேமி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உத்தரவிட்டிருந்தார்.

எனவே, இஸ்ரேலின் கூற்றுப்படி, ஹமாஸின் இந்த முழு தாக்குதலுக்கும் சின்வார் முக்கிய மூளையாக இருந்தார். அவர் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. முன்னதாக, செப்டம்பர் 27 அன்று லெபனானின் பெய்ரூட்டில் ஹிபுல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றது.

இதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் ஹிபுல்லா துணைத் தலைவர் நபீல் கௌக் உயிரிழந்தார். இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வெறும் 3 மாதங்களில் இஸ்ரேல் 3 பெரிய எதிரிகளை கொன்று குவித்துள்ளது.

யார் இந்த யாஹ்யா சின்வார்?

61 வயதான யாஹ்யா சின்வார் 1962 ஆம் ஆண்டு காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். 1987 இல் நிறுவப்பட்ட ஹமாஸின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 1980 களின் பிற்பகுதியில் 12 நபர்களைக் கொன்றதற்காக சின்வார் இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: சடலங்களை உண்ணும் தெரு நாய்கள்.. காசாவில் தொடர் தாக்குதல்களால் பஞ்சம் ஏற்படும் அபாயம்..

சின்வால் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த கழித்தார். அவர் 2011ஆம் ஆண்டு சில ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியுறவுத்துறை சின்வாரை உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் சேர்த்தது.

தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சின்வார் தலைமை தாங்கினார். இதன்பிறகு, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மரணத்திற்குப் பிறகு, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...