Lebanon Attack: சர்வ நாசம்.. 182 பேர் மரணம்.. லெபனானை நிலைகுலைய வைத்த இஸ்ரேல்!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 182 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதோடு, இஸ்ரேல் ஹில்புல்லா இடையேயான மோதலும் தீவிரம் அடைந்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 182 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக அரங்கேறி வருகிறது. மறுபுறம் இஸ்ரேல் ஹில்புல்லா இடையேயான மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 17ஆம் தேதி லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சேமிப்பு சாதனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்கவிட்டாலும் இத்தகைய உயர் தொழில்நுட்பத் தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.
லெபனானை நிலைகுலைய வைத்த இஸ்ரேல்
இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், தெற்கு லெபானனில் இஸ்ரேலும் குண்டுவீச்சு நடத்தியது. அந்த குண்டு வீச்சுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லாக்கள் 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று லெபானனில் 300 இலக்குகளைத் குறிவைத்துக் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு லெபனானை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வரும் காலங்களில் பல தாக்குதல்களை நடத்துவோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக கூறியுள்ளது.
Also Read: இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறை.. 2வது விருப்பு வாக்கு முடிவுக்கு காத்திருக்கும் அதிபர் பதவி!
இந்த தாக்குதலில் சுமார் 182 பேர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை:
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் டெல் அவிவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூடுதல் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்ததைக் காட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
இதற்கிடையில் தெற்கு லெபனானில் கிராமங்கள் உள்பட பல இடங்களை ஹஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால், லெபானில் உள்ள மக்கள் உடனயைக வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
The Chief of the General Staff approves strikes on Hezbollah targets in Lebanon from the IDF Headquarters Underground Operations Center. So far, more than 300 Hezbollah targets have been struck today. pic.twitter.com/hbNKWJ8QAs
— Israel Defense Forces (@IDF) September 23, 2024
இஸ்ரேல் – லெபனான் உறவு:
இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், காசாவில் போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், காசாவில் நடக்கும் போர் மேற்கு ஆசிய முழுவதும் பரவிவிடுமோ என்ற உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில், இன்று லெபானனில் 300 இலக்குகளைத் குறிவைத்துக் தாக்கியதில் அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Also Read: இலங்கையில் புதிய சகாப்தம்.. அதிபராக பதவியேற்கும் இடதுசாரி தலைவர் அனுரகுமார திசாநாயக..!
இதனால் அங்கு மற்றொரு போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்த மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஹமாஸ் மற்றும் ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.