Israel Iran War: “முதல்ல ஈரானில் உள்ள அணு ஆயுத தளத்த தாக்குங்க” இஸ்ரேலுக்கு ஐடியா கொடுத்த டிரம்ப்! - Tamil News | Israel hit iran nuclear facilities frist says former us president donald trump tamil news | TV9 Tamil

Israel Iran War: “முதல்ல ஈரானில் உள்ள அணு ஆயுத தளத்த தாக்குங்க” இஸ்ரேலுக்கு ஐடியா கொடுத்த டிரம்ப்!

Published: 

05 Oct 2024 14:55 PM

ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் குறிவைக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், முதலில் அணுசக்தி நிலையங்களை தாக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்றும் இஸ்ரேலுக்கு அவர் உத்தரவிட்டார். 

Israel Iran War: முதல்ல ஈரானில் உள்ள அணு ஆயுத தளத்த தாக்குங்க இஸ்ரேலுக்கு ஐடியா கொடுத்த டிரம்ப்!

டிரம்ப் (picture credit: PTI)

Follow Us On

ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் குறிவைக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், முதலில் அணுசக்தி நிலையங்களை தாக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்றும் இஸ்ரேலுக்கு அவர் உத்தரவிட்டார்.  இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான  போரைத் தொடர்ந்து  ஹமாஸ்க்கு ஆதரவாக லெபானில்  செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  இஸ்ரேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நடந்த தாக்குதலில்  ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா,   துணைத் தலைவர் நபீல்  கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் – ஈரான் போர்:

இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கிளப்பியது. ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை கடந்த 3ஆம்  தேதி நடத்தியது.

இதற்கு பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

Also Read: MacArthur Fellow-வாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பட்டியலின பேராசிரியர்.. யார் இந்த ஷைலஜா பாய்க்?

ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்கு பிறகு தற்போதைய பிரதமர் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளார்.  இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது முதல்முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.  அந்த  ஏவுகணையை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து இடைமறித்து அழித்தன.

அமெரிக்காவின் நிலைபாடு:

இப்படியான சூழலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பான கருத்தை கூறியுள்ளார். அதாவது, வட கரோலினாவில் நடந்த பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரிடம் ஈரானின் அணு ஆயுத நிலையங்களில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் இலக்கு வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “ஈரானின் அணு ஆயுத நிலையங்களை முதலில் தாக்குங்கள். மற்றதைப் பற்றி பின்னர் யோசிக்கலாம்” என்றார். முன்னதாக அதிபர் டிரம்பிடம் ஈரானைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஈரானைத் தாக்குவீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு அணு ஆயுத நிலையங்களை தாக்காமல் செல்வதாக கூறினார்.

மேலும், ஈரானின் அணுஆயுத தாக்குதலை நீங்கள் ஆதரிப்பீர்கள? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என்று பைடன் பதிலளித்தார். பைடனின் இந்த பதில் குறித்து நேற்று டிரம்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் அதை தவறாகப் புரிந்து கொண்டார் என்று நான் நினைக்கிறேன்.

இஸ்ரேலுக்கு ஆதரவு:

நமக்கு இருக்கும் மிகப்பெரிய ஆபத்து அணு ஆயுதங்கள்.  எனவே, முதலில் அணு ஆயுதங்களை தாக்குங்கள். மற்றதை பிறகு பார்க்கலாம். இஸ்ரேலியர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நாங்கள் அவர்களுடன் விவாதிப்போம்” என்று கூறினார். முன்னதாக, ஏப்ரல் மாத ஈரான் தாக்குதலுக்கு பிறகு இஸ்லை அடக்கி வைத்த அமெரிக்க உள்ளிட்ட ஆதரவு நாடுகள் இந்த முறை அந்த அளவுக்கு அந்த நாட்டைக் கட்டுப்படுத்தவில்லை.

Also Read: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டிய டிரம்ப்.. 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லாவினர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர் பதற்றம்..

ஈரானின் அணுசக்தி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில் தான் தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறும் அமெரிக்க அதிகர் பைடன், எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  இப்படியான சூழலில், டொனால்டு டிரம்ப்  அணு ஆயுத நிலையங்களை தாக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

Related Stories
MacArthur Fellow-வாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த பட்டியலின பேராசிரியர்.. யார் இந்த ஷைலஜா பாய்க்?
Iran Israel War: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டிய டிரம்ப்.. 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லாவினர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர் பதற்றம்..
Israel: ”தேவைப்பட்டால் ஆக்‌ஷன் தான்”.. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அயதுல்லா அலிகமேனி எச்சரிக்கை!
Israel: தாக்குதலை விரிவுப்படுத்த திட்டம்.. இஸ்ரேல் எடுக்கப்போகும் அதிரடி ஆக்‌ஷன்!
Iran Israel War: மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்.. பணவீக்கம் குறித்து முற்றுபுள்ளி வைத்த அமெரிக்கா..
Iran Israel War: ” இந்த ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமையும்” – யூத புத்தாண்டில் வாழ்த்து கூறிய பிரதமர் நெதன்யாகு..
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version