5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Iran Israel War: 100 போர் விமானங்கள்.. ஈரான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பாதிப்புகள் என்னென்ன?

இஸ்ரேல் ஈரான் போர்: ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. இருப்பினும், பதிலடி தாக்குதல் நிச்சயமாக நடத்துவோம் என்று ஈரான் கூறியுள்ளது.

Iran Israel War: 100 போர் விமானங்கள்.. ஈரான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பாதிப்புகள் என்னென்ன?
இஸ்ரேல் ஈரான் போர் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Oct 2024 14:42 PM

இஸ்ரேல் மற்றும் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஓராண்டுக்கு மேலாக போர் பதற்றம் நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதராவக இருக்கும் அனைத்து நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நடந்த தாக்குதலில்  ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா,   துணைத் தலைவர் நபீல்  கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கிளப்பியது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தது.

ஈரான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்

அதன்படியே கடந்த 3ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுணைத் தாக்குதலை நடத்தியது. சுமார் 180 ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போர் தொடங்கும் சூழல் நிலவி வருகிறது.

இதனால் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அதன்படியே, இன்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இது பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.

ஈரானின் ராணுவ உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. Ilam, Khuzestan மற்றும் Tehran ஆகிய மாகாணங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

பாதிப்புகள் என்னென்ன?

சில மணி நேரம் மட்டுமே இந்த தாக்குதல் நடந்தது. அதன்பிறகு தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் அதிகாரிகள் கூறுகையில், “இன்று காலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

Also Read: இந்தியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஜெர்மனி போக தயாராகுங்க.. நல்ல செய்தி சொன்ன பிரதமர்!

இதில் பெரிய சேதம் எதுவும் இல்லை. எந்த உயிரிழப்பும் இல்லை. இஸ்ரேல் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் விகிதாசார எதிர்வினையை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்” என்றனர். இதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம். இதனால் இஸ்ரேல் மிகவும் கவனமாக உள்ளது.

அடுத்த என்ன நடக்கும்?

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால் மத்திய கிழக்கு மேலும் பதற்றம் அதிகரிக்கும். ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவைப் போலவே, இஸ்ரேலும் இந்த முறை ஈரானின் இராணுவ தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம்.

இது ஈரானின் உச்ச தலைவராக இருக்கும் அயதுல்லா கமேனி பெரும் சவாலாக இருக்கும். இஸ்ரேல் மீது சக்திவாய்ந்த எதிர் தாக்குதலை ஈரான் நடத்த முடியும். அதற்காக ஈரான் வலுவான இராணுவ வளங்களைக் கொண்டுள்ளது. இதனால் அதிரடி தாக்குதலை ஈரான் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

Also Read: அதிகரிக்கும் அழுத்தம்.. ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

அமெரிக்கா சொல்வது என்ன?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்க தன் நிலைபாட்டை கூறியிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், “இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் இந்த போர் மேலும் தீவிரமடையாமல் இருக்கும்” என்றார். மேலும், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று வலியுறுத்திய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை தணிப்பதும் எங்களது நோக்கம் என்றார்.

Latest News