5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Israel Iran War: ஈரானுக்கு தனி பிளான்.. இஸ்ரேலின் சதி திட்டம்.. கசிந்தது அமெரிக்க உளவு தகவல்!

காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இதில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றன. சின்வார் கொல்லப்பட்டாலும் காசாவில் ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் என பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்

Israel Iran War: ஈரானுக்கு தனி பிளான்.. இஸ்ரேலின் சதி திட்டம்.. கசிந்தது அமெரிக்க உளவு தகவல்!
இஸ்ரேல் ஈரான் போர் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Oct 2024 11:33 AM

காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இதில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றன. சின்வார் கொல்லப்பட்டாலும் காசாவில் ஹமாசை ஒழிக்கும் வரை போர் தொடரும் என பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அதேசமயம் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஈரானை தீர்க்க இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்:

இதற்கு இரண்டு தரப்புக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் இறங்கியது. இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலும் எச்சரித்துள்ளது. இருப்பினும், எந்த ஒரு தாக்குதலையும் இஸ்ரேல் இதுவரை நடத்தவில்லை. அதேசமயம், காசாவில் ஹமாஸ் தயாராக உள்ளது என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமனேனி நேற்று முன்தினம் கூறினார்.

காசாவின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் மீதான சண்டை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

Also Read: ”பெரிய தவறு பண்ணிட்டீங்க” ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்… கண்டித்த இஸ்ரேல் பிரதமர்!

இப்படியான சூழலில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக திட்டத்தை அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்கள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவது குறித்த இரண்டு   ஆவணங்களை கசிந்து இருக்கிறது.

கசிந்தது அமெரிக்க உளவு தகவல்

அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மற்றும் இஸ்ரேல் நடத்திய ராணுவ பயிற்சிகள் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளன. அக்டோபர் 15 மற்றும் 16 தேதியிட்டு இரண்டு ஆவணங்கள் டெலிகிராமில் வெளியிடப்பட்டன என கூறப்படுகிறது.

இஸ்ரேலின் இராணுவப் பயிற்சிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களைப் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளன. இது ஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. முதல் ஆவணத்தில் ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் விமானப்படை தயாராகுவதை காட்டுகிறது.

ஈரானுக்கு எதிரான சாத்தியமான இராணுவ நடவடிக்கையை ஒத்திகை பார்ப்பதையும் ஆவணம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. வான்வழி மூலம் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடத்தியதையும் காட்டுகிறது. மேலும், ஈரான் தாக்குதலை எதிர்த்து ஏவுகணையை நிலைநிறுத்ததலும் இடம்பெற்றுள்ளன.

Also Read: லெபனானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டில் தாக்குதல்!

இரண்டாவது ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ சொத்துக்களை மூலோபாய இடங்களுக்கு நகர்த்த இஸ்ரேலிய முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. இஸ்ரேலிய இராணுவ பயிற்சிகளை விவரிக்கிறது. இருப்பினும், செயற்கைக்கோள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்கள் ஈரானுக்கான இஸ்ரேலின் திட்டங்களின் முழு வீச்சையும் வெளிப்படுத்துகின்றது. இந்த ஆவணங்களை கசிந்து இருப்பது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் அமெரிக்கா உறவு:

இஸ்ரேல் என்ற யுத நாடு உருவாகுவதில் முக்கிய பங்காற்றிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா. நாடு உருவான ஒரு சில நிமிடங்களிலேயே அதற்கு அங்கீகாரம் வழங்கியது அமெரிக்கா. அதுமட்டுமின்றி நாடு உருவானதில் இருந்து இன்று வரை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது.

மத்திய கிழக்கில் தன்னுடைய முக்கிய நட்பு நாடாக இஸ்ரேலை அமெரிக்கா பார்க்கிறது. அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது அமெரிக்கா. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பது கேள்வி எழாமல் இல்லை.

அதற்கு முக்கிய காரணமாக கிறிஸ்தவர்கள் மற்றும் யுதர்களுக்கு இடையேயான உறவை பார்க்கலாம். தற்கால அரசியலை பொருத்தவரை ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போராக இருந்தாலும் சரி, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடந்து வரும் அப்பட்டமான போர் குற்றங்களாக இருந்தாலும், ஹிஸ்புல்லா ஈரானுக்கு எதிரான மோதலாக இருந்தாலும் அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News