5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Israel: தாக்குதலை விரிவுப்படுத்த திட்டம்.. இஸ்ரேல் எடுக்கப்போகும் அதிரடி ஆக்‌ஷன்!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் அது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகர் மற்றும் ஜெருசலம் நகரங்களை குறிவைத்து ஈரான் அரசு ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலால் இருநாடுகள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Israel: தாக்குதலை விரிவுப்படுத்த திட்டம்.. இஸ்ரேல் எடுக்கப்போகும் அதிரடி ஆக்‌ஷன்!
கோப்பு புகைப்படம் (Photo: Twitter)
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 03 Oct 2024 18:36 PM

இஸ்ரேல்-ஈரான் போர்: இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தனது தாக்குதலை விரிவுப்படுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காஸாவை இலக்காக கொண்டு பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பும், இஸ்ரேலும் கடந்த ஓராண்டாக போர் புரிந்து வருகிறது. இதில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடைய பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.

இதனால் இரு நாடுகளிடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானுக்கு வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே  இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான் அரசு,  தங்கள் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைக்கு பழி தீர்ப்போம் என தெரிவித்திருந்தது. ஆனால் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தாமல் ஈரான் அமைதி காத்து வந்தது.

இதையும் படிங்க: iPhone Diwali Sale : ஸ்மார்ட்போன்கள் முதல் மேக் புக் வரை.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்!

இப்படியான நிலையில் கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்தான்புல் அமைப்பின் தலைவர் நஸ்ரூல்லா கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.  அடுத்தடுத்த தாக்குதலால் இஸ்ரேலை பழிவாங்கப் போவதாக ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் அது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகர் மற்றும் ஜெருசலம் நகரங்களை குறிவைத்து ஈரான் அரசு ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலால் இருநாடுகள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் முன்கூட்டியே அறிந்து கொண்டதால் அங்கு வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானில் உள்ள முக்கிய பொருளாதார இடங்களை தகர்க்க அந்நாட்டு ராணுவத்தினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Tamilnadu Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

ஏற்கனவே பொருளாதார தடைகளால் பெரும் பின்னடைவில் இருக்கும் ஈரான் நாட்டின் நாட்டில் மேலும் பொருளாதார சிக்கல்களை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரானின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் எண்ணெய் கிணறுகளை தாக்கி அளிக்க தீவிரம் காட்டப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஈரானில் உள்ள அணு ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் குறி வைத்துள்ளதால் இந்த போர் மேலும் தீவிரமாகும் என கூறப்படுகிறது.

மேலும் இன்று காலை மத்திய பெய்ரூட்டின் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய மையம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இதனால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வாசலில் நிற்க வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் ஐந்து பேர் பலியாகி உள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது

இதனிடையே லெபனானின் தெற்கு பகுதியில் 2006 ஆம் ஆண்டு போருக்கு பிறகு ஐநா சபையால் உருவாக்கப்பட்ட வடக்கு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசித்து வரும் பொது மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் லெபனானின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Latest News