Israel – Lebanon: லெபனானுடனான போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்.. காரணம் என்ன தெரியுமா?
அதாவது இரு நாட்டுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், லெபனானுடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால் ஹிஸ்ஸ்புல்லா அமைப்பு ஏதேனும் விதிமுறைகளை மீறினால், அதற்கான பதில் தாக்குதல் நிச்சயம் கொடுக்கபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை தனது முழு அமைச்சரவைக்கும் சமர்பிப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நெதன்யாகு ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதனுடன், இஸ்ரேலிய பிரதமர் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்கிறார், எந்த சூழ்நிலையில் இஸ்ரேல் மீண்டும் லெபனானை தாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இரு நாட்டுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், லெபனானுடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால் ஹிஸ்ஸ்புல்லா அமைப்பு ஏதேனும் விதிமுறைகளை மீறினால், அதற்கான பதில் தாக்குதல் நிச்சயம் கொடுக்கபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை தனது முழு அமைச்சரவைக்கும் சமர்பிப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்?
இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நெதன்யாகு, “ லெபனானில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தே இந்தப் போர்நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும், எவ்வளவு காலம் தாக்குதல் நடத்தப்படாமல் இருக்கும். ஹிஸ்புல்லாஹ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையாக தாக்குவோம். எல்லையில் ஹிஸ்புல்லா பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் தாக்குவோம். ஹிஸ்புல்லா ராக்கெட்டுகளை ஏவினால் அதற்கு நிச்சயம் பதிலளிப்போம். நாங்கள் ஒப்பந்தத்தை செயல்படுத்துவோம் மற்றும் எந்த மீறல்களுக்கும் வலுக்கட்டாயமாக பதிலளிப்போம், நாங்கள் வெற்றிபெறும் வரை நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: BNPL முறை ஷாப்பிங் பாதுகாப்பானதா? கவனிக்க வேண்டியது என்ன?
போர் நிறுத்தம் ஏன்?
இந்த நேரத்தில் ஏன் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நெதன்யாகு விளக்கமளித்துள்ளார் . இதற்குப் பின்னால் மூன்று காரணங்கள் உள்ளன.
- ஈரான் நாட்டு மீது கவனம் செலுத்த வேண்டும்.
- தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வு தேவை, அதேபோல் தீர்ந்துபோன ஆயுதங்களை ரீலோட் செய்யவும் இந்த நேரம் பயன்படுத்தப்படும்.
- ஈரானும் ஹிஸ்புல்லாவும் போரில் ஹமாஸுக்கு உதவுகிறார்கள், இப்போது போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஹமாஸ் தனித்து விடப்படும் என்ற காரணத்திற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது.
#WATCH | Prime Minister Benjamin Netanyahu says, “The length of the ceasefire depends on what happens in Lebanon. We will enforce the agreement and respond forcefully to any violation. We will continue united until victory.”
Source: Prime Minister of Israel ‘X’ handle pic.twitter.com/VRJeCpqHHi
— ANI (@ANI) November 26, 2024
ஹிஸ்புல்லாவைப் பற்றி நெதன்யாகு கூறுகையில், ” ஹமாஸை ஆதரித்து வந்த ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் ஆதரவு அளித்து வந்த அமைப்பும், இப்போது முன்பை விட மிகவும் பலவீனமாக உள்ளது. நாங்கள் ஹிஸ்பொல்லாவை பல தசாப்தங்களாக பின்னோக்கி வைத்துள்ளோம். அதன் முக்கிய தலைவர்களை ஒழித்துவிட்டோம். அவர்களின் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் அழித்துள்ளோம். லெபனான் முழுவதும் மூலோபாய நோக்கங்களை இலக்காகக் கொண்டோம், பெய்ரூட்டை அதன் மையமாக நிர்நயித்தோம” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இளம்பெண்ணை கொன்ற காதலன்.. பூட்டிய அறையில் நாள் முழுவதும் சடலத்துடன் இருந்த கொடூரம்!
போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:
ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடந்து வருகிறது. லெபனான் போரில் குறைந்தது 3,768 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கடந்த இரண்டு மாதங்களில் இறந்துள்ளனர். மறுபுறம், ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இதுவரை 82 இராணுவத்தினர் மற்றும் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் காசா முழுவதுமே அழிந்துவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.