Israel Iran War: 26 நாட்களுக்கு பின் ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. அதிகாலையில் ராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. - Tamil News | israel responds to irans ballistic missile attack by counter attack in iran know more in detail in tamil | TV9 Tamil

Israel Iran War: 26 நாட்களுக்கு பின் ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. அதிகாலையில் ராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..

சிரியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள ராணுவ தளங்களையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. சிரிய அரசாங்க செய்தி நிறுவனமான SANA இன் அறிக்கையின்படி, இஸ்ரேல் தெற்கு மற்றும் மத்திய சிரியாவில் உள்ள பல இராணுவ இலக்குகளை அதிகாலை 2 மணியளவில் தாக்கியது. இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கிய நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Israel Iran War: 26 நாட்களுக்கு பின் ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. அதிகாலையில் ராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் (pic courtesy: twitter)

Updated On: 

26 Oct 2024 07:15 AM

ஒக்டோபர் 1ஆம் தேதி, ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானில் உள்ள 10 இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், ஈரானில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இஸ்ரேல் ராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மட்டுமே கூறப்படுகிறது. ஆனால், ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு சற்று முன்பு இஸ்ரேல் வெள்ளை மாளிகைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், சிரியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள ராணுவ தளங்களையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. சிரிய அரசாங்க செய்தி நிறுவனமான SANA இன் அறிக்கையின்படி, இஸ்ரேல் தெற்கு மற்றும் மத்திய சிரியாவில் உள்ள பல இராணுவ இலக்குகளை அதிகாலை 2 மணியளவில் தாக்கியது. இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கிய நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: இந்தியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஜெர்மனி போக தயாராகுங்க.. நல்ல செய்தி சொன்ன பிரதமர்!

ஈரான் மீதி நடத்தப்பட்ட தாக்குதல்:


இந்த தாக்குதல் தொடர்பாக, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் அக்டோபர் 7, 2023 முதல் ஏழு முனைகளில் இஸ்ரேலை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், உலகின் மற்ற இறையாண்மையுள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதில் சொல்ல உரிமை உண்டு. இஸ்ரேலையும் நமது மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார். ஈரானில் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது.

ஆதரவளித்த அமெரிக்கா:

ஆதாரங்களின்படி, இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களையோ அல்லது எண்ணெய் வயல்களையோ தாக்கவில்லை, ஆனால் கடந்த காலத்தில் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை நாங்கள் குறிவைக்கிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அத்தகைய இலக்குகளை தாக்க வேண்டாம், மேலும் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலளிக்கும் இஸ்ரேலின் உரிமையையும் அமெரிக்கா ஆதரிக்கிறது.

மேலும் படிக்க:  ஜியோ பயனர்களுக்கு இனிப்பான செய்தி.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜியோ!

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன் தொடங்கிய காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சமீபத்திய மாதங்களில் இஸ்ரேல் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலும் லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்தியது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு அமெரிக்கா திரும்பிய நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது. இங்கே அவரும் மற்ற அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலை பிராந்தியத்தில் மோதலை அதிகரிக்காத வகையில் பதிலளிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் அதிகளவு நன்மை தரும் மிளகு..!
சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..!
வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!