5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஃபாவில் தொடரும் அழுகுரல்.. 7 மாதங்களுக்கு நீடிக்கயிருக்கும் போர்!

36 ஆயிரம் உயிர்களை கொன்று குவித்த இஸ்ரேல் போர் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காசாவில் நடத்திய தாக்குதலுக்கு சர்வதே நாடுகள் கண்டன குரலை எழுப்பி வரும் நிலையில், இஸ்ரேல் 7 மாதங்களுக்கு போரை நீடிப்பதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி, "2024ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும். அனைத்து ஹமாஸ் அமைப்பையும் அழிக்கும் வரை போர் நிறுத்தம் முடிவுக்கு வராது" என்றார்.

ரஃபாவில் தொடரும் அழுகுரல்.. 7 மாதங்களுக்கு நீடிக்கயிருக்கும் போர்!
இஸ்ரேல் போர்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 May 2024 11:06 AM

7 மாதங்களுக்கு நீடிக்கும் போர்: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் சூழல் உருவாகியது. இதனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுக்களுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பிரச்னைக்கு முக்கிய காரணம். இந்த பகுதிக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியை மீட்க இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் முயற்சித்து வருவதாக தெரிகிறது. காசா பகுதியை விட்டுக்கொடுக்க ஹமாஸ் அமைப்பு மறுத்து வரும் நிலையில், காசா-எகிப்து எல்லையான ரஃபாவின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவது தன் வசத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனால், இஸ்ரேல் தனது போரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி, “2024ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும். அனைத்து ஹமாஸ் அமைப்பையும் அழிக்கும் வரை போர் நிறுத்தம் முடிவுக்கு வராது” என்றார்.

Also Read: ஸப்பா.. என்னா தூக்கம்.. என்னா தூக்கம்.. ஜோ பிடன் வீடியோ வைரல்!

இதுவரை 35 ஆயிரம் உயிரிழப்பு:

காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 12,000 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து, பிணைக் கைதிகளை விடுவிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ரஃபாவுக்கு லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்தனர். இப்படியான சூழலில் தான் ரஃபாவில் உள்ள அகதிகள் முகாமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறி தனது தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்த இஸ்ரேல், தல் அல்-சுல்தான் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தை எழுப்பியது. இதனிடையே, இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டுத் தூதரை பிரேஸில் அதிபர் லூயி லூலா டிசில்வா திரும்ப அழைத்துள்ளார்.

Also Read: ரஃபாவில் கொத்து கொத்தமாக கொல்லப்படும் குழந்தைகள்.. விழிக்குமா உலக நாடுகள்.. வைரலாகும் பதிவு!

 

Latest News