Israel – Gaza War : பிஞ்சு குழந்தைகளுக்காக போரை நிறுத்திய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்.. என்ன காரணம் தெரியுமா?

War Stopped | கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் சூழல் உருவாகியது. இதனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுக்களுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. . இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பிரச்னைக்கு முக்கிய காரணம்.

Israel - Gaza War : பிஞ்சு குழந்தைகளுக்காக போரை நிறுத்திய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்.. என்ன காரணம் தெரியுமா?

கோப்பு புகைப்பட்டம் (Hani Alshaer/Anadolu via Getty Images)

Updated On: 

31 Aug 2024 13:32 PM

காசா போர் நிறுத்தம் : ஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் சூழல் உருவாகியது. இதனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுக்களுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலுக்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பிரச்னைக்கு முக்கிய காரணம். இந்த பகுதிக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த காசா பகுதி என்பது பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையும் படிஙக் : Donald Trump : டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.. வெளிநாடுகளின் தலையிடல் இல்லை.. FBI திட்டவட்டம்!

காசா பகுதியை விட்டுக்கொடுக்க ஹமாஸ் தொடர்ந்து மறுப்பு

இந்த பகுதியை மீட்க இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் முயற்சித்து வருவதாக தெரிகிறது. காசா பகுதியை விட்டுக்கொடுக்க ஹமாஸ் அமைப்பு மறுத்து வரும் நிலையில், காசா-எகிப்து எல்லையான ரஃபாவின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவது தன் வசத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனால், இஸ்ரேல் தனது போரை நீடிப்பதாக அறிவித்திருந்ததை அடுத்து தொடர் தாக்குதலை நடத்தி வந்தது. இந்நிலையில் காசா மீதான போரை, இஸ்ரேல் 3 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Telegram : நாட்டை விட்டு வெளியேற தடை.. ரூ.46 கோடி பிணைத்தொகை.. கடும் நெருக்கடியில் டெலிகிராம் CEO!

காசாவில் போலியோ பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்

இஸ்ரேல் – காசாவுக்கு இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில், காசாமீதான போர் இடை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாச் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்குவதை ஒட்டி, மூன்று நாட்களுக்கு மட்டும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. காசாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தற்போது போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலியோ அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐநா சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. கூகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..

குழந்தைகளுக்காக போரை நிறுத்திய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?