5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Israel Iran War: ஈரான் மீது சைபர் தாக்குதல்.. முடங்கிய 3 துறை.. ஆட்டம் காட்டியதா இஸ்ரேல்?

ஈரான் முழுவதும் சைபர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பின்னணியில் இஸ்ரேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஈரானின் மூன்று துறைகள் சைபல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் உச்ச கவுன்சில் ஆஃப் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கூறியுள்ளார்.

Israel Iran War: ஈரான் மீது சைபர் தாக்குதல்.. முடங்கிய 3 துறை.. ஆட்டம் காட்டியதா இஸ்ரேல்?
ஈரான் அதிபர் (picture credit: PTI/Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 17:52 PM

ஈரான் முழுவதும் சைபர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பின்னணியில் இஸ்ரேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஈரானின் மூன்று துறைகள் சைபல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் உச்ச கவுன்சில் ஆஃப் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், “ஈரான் அரசாங்கத்தின் கிட்டத்தட்ட மூன்று துறைகள் சைபல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, சட்டம் மற்றும் நிர்வாகத் துறை சைபல் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. குறிப்பாக எங்கள் அணுசக்தி வசதிகள் இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது சைபர் தாக்குதல்

எரிபொருள் விநியோகம், நகராட்சி நெட்வொர்க்குகள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், துறைமுகங்கள் போன்றவை குறிவைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல அமைப்புகள் மிது சைபல் தாக்குதல் நடந்துள்ளனது” என்றார்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான  போரைத் தொடர்ந்து  ஹமாஸ்க்கு ஆதரவாக லெபானில்  செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

Also Read: “இஸ்ரேலுக்கு உதவினால் அவ்வளவுதான்” அரபு நாடுகளுக்கு ஈரான் வார்னிங்!

குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நடந்த தாக்குதலில்  ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா,   துணைத் தலைவர் நபீல்  கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கிளப்பியது.

முடங்கிய மூன்று துறை:

ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த 3ஆம்  தேதி ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியது.

இதற்கு பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்கு பிறகு தற்போதைய பிரதமர் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்தவித தாக்குதலும் இஸ்ரேல் நடத்தவில்லை. ஈரான் தாக்குதல் நடத்திய 12 நாட்கள் ஆகியும் இஸ்ரேல் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த  இஸ்ரேல் திட்டபோட்டு வருகிறது. தன் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் எப்போது பதிலடி கொடுக்கும் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றனர்.

ஈரான் அதிரடி உத்தரவு:

இஸ்ரேல் – ஈரான் இடையே நேரடி போர் வெடித்தால் சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இப்படியான சூழலில், ஈரான் முழுவதும் சைபர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது மேலும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. இதனால், ஈரான் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பு மொபைல் போன்களைத் தவிர, பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் போன்ற மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை விமானத்தில் எடுத்து செல்ல கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலுக்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இசைப்புயல்.. அமெரிக்க தேர்தலில் செம்ம ட்விஸ்ட்!

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளை குறிவைத்து இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான். இதனால் மத்திய கிழக்கல் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் ஈரான் அலர்டாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News