Laughing Act : இங்கு சிரிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்.. ஜப்பானின் புதிய விதி.. முழு விவரம் இதோ!
Japan New Act | சிரிப்பின் மகத்துவத்தை உணர்ந்து அனைத்து மக்களும் சிரிக்க வேண்டும் என ஜப்பானில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு சட்டமா என வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் வாழும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிரிப்பதற்கு சட்டம் : மனிதர்கள் விலங்களிடம் இருந்து தனித்திருப்பதற்கு காரணம், மனிதர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்பது தான். மனிதர்களுக்கு காதல், மகிழ்ச்சி, சிரிப்பு, சோகம், அழுகை என அனைத்து உணர்ச்சிகளும் உள்ளன. மகிழ்ச்சியான செய்தியை கேட்டால் சிரிப்பது, துக்கமான செய்திகளை கேட்டால் அழுவது மனித இனத்தின் ஆகச் சிறந்த பண்புகளாக உள்ளன. மனிதர்கள் உணர்ச்சியற்றவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். வாழ்வின் அர்த்தமே புரியாமல் போய்விடும். எனவே உணர்சி மிக்க வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாக கருதப்படுகிறது. ஆனால் பரபரப்பான இந்த உலகில் பலரும் சிரிக்கவே மறந்துவிடுகின்றனர். இந்த நேரத்திற்கு இதை செய்து முடிக்க வேண்டும் என நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால் சிரிப்பை மறந்துவிடுகின்றனர். அவ்வாறு சிரிக்காமல் இருப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமற்றது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜப்பானில் சிரிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் தான் சிரிப்பின் மகத்துவத்தை உணர்ந்து அனைத்து மக்களும் சிரிக்க வேண்டும் என ஜப்பானில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு சட்டமா என வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் வாழும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிரிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது
யமகட்டா மருத்துவ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவியல் ஆய்வறிக்கையை அடிப்படையாக் கொண்டு இயற்றப்பட்ட அந்த சட்டத்தில், தினமும் சிரிப்பதன் மூலம் மாரடைப்புக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், சிரிப்பது மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமன்றி பதற்றத்தையும் குறைக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விண்வெளியிலும் நுண்ணுயிரிகள்.. தீவிர ஆராய்ச்சியில் இறங்கிறய விஞ்ஞானிகள்!
எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர்
இதன் காரணமாக ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஓவ்வொரு மாதத்தின் எட்டாவது நாளில் சிரிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிரிப்பு தினம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் உடல் ஆரோக்கியத்துடன், எந்த வித பிரச்னைகளும் இன்றி மகிழ்ச்சியாக இருக்க இந்த சட்டம் இயற்றப்பட்டாலும், சிரிப்பை கட்டாயமாக்குவது அடிப்படை உரிமை மீறல் என்று ஜப்பானிய எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க : ராட்சத விலங்குகள் அழிவுக்கு காரணம் மனிதர்களா?.. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்ன?
சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மனிதர்கள் வாய் விட்டு சிரிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வாய் விட்டு சிரிப்பது மூளை செயல்பாட்டிற்கு உதவுவது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டுமன்றி ரத்த அழுத்தத்தை சீராக்கவும் அது உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.