சைக்கிள் ஓட்டும்போது ஃபோன் பேசினால் 6 மாதம் சிறை.. எங்கு தெரியுமா?
ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்திக் கொண்டோ, செல்போனில் பேசிக் கொண்டு சென்றாலோ ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் செல்லும்போது விபத்துகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்திக் கொண்டோ, செல்போனில் பேசிக் கொண்டு சென்றாலோ ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் செல்லும்போது விபத்துகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. உலகம் முழுவதும் சாலை விபத்துகள் என்பது நடந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமாக இருப்பது செல்போன் தான். அதாவது, செல்போனில் பேசிக் கொண்டும், செல்போனை பார்த்துக் கொண்டும் பலரும் தங்களது வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
ஜப்பான் அரசு புதிய அறிவிப்பு
இதில் விபத்துக்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற வாகனங்களை ஓட்டும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து நாட்டிலும் விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், விதிகளை மீறி பலரும் வாகனங்களை ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அந்தந்த நாடுகளில் இதற்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜப்பான் நாட்டில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்திக் கொண்டோ, செல்போனில் பேசிக் கொண்டு சென்றாலோ ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பொது போக்வரத்து முடங்கியது. இதனால், அங்கு சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுமாக அதிகரித்தது.
Also Read : தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்தியா பற்றி பேசிய கமலா ஹாரிஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?
சைக்கிள் ஓட்டும்போது ஃபோன் பேசினால் 6 மாதம் சிறை
அதேசமயம் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இது அந்நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும்.
2018 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் தொலைபேசிகளைப் பயன்படுத்தி சைக்கிள் ஓட்டுபவர்களால் 454 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது முந்தைய ஐந்தாண்டு காலத்தை விட 50% அதிகம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அப்போது, சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதே விபத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. இதனால் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தற்போது அங்கு போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட சாலை போக்குவரத்து விதிகளின்படி, சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடுது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2 லட்சம் அபராதம்
மேலும், மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஒசாகா அதிகாரிகள் ஏற்கனவே ஐந்து மீறல்களை பதிவு செய்துள்ளதாக கூறினர்.
இதில் குடிபோதையில் சைக்கிள் ஓட்டிய இரண்டு ஆண்கள் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் மற்றொரு சைக்கிள் ஓட்டியவருடன் மோதியுள்ளார், ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றனர். சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை அதிகாரிகள் கட்டாயமாக்கினர். மே மாதம், ஜப்பான் பாராளுமன்றம் போக்குவரத்து விதிமீறல்களுக்காக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்றி நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.