Japan : அழிவை நோக்கி செல்கிறதா ஜப்பான்.. ஆராய்ச்சிகள் கூறும் காரணம் இவை தான்!

Population Issue | ஜப்பானில் கடந்த 2022 ஆம் ஆண்டு 125 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 2023 ஆம் ஆண்டு 124.9 மில்லியனாக குறைந்துள்ளது. ஒரு ஆடில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் தொகை குறைந்துள்ளது. ஜப்பானில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை வெகுவாக குறைய தொடங்கியது. அதன்படி, கடந்த 15 ஆண்டுகளாக ஜப்பானின் மக்கள் தொகை இறங்குமுகத்தில் உள்ளது

Japan : அழிவை நோக்கி செல்கிறதா ஜப்பான்.. ஆராய்ச்சிகள் கூறும் காரணம் இவை தான்!

ஜப்பான்

Published: 

29 Jul 2024 17:36 PM

ஜப்பான் மக்கள் தொகை : ஒரு நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே செல்வது எப்படி ஒரு பிரச்னையோ, அதேபோல ஒரு நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்துக்கொண்டே செல்வதும் பிரச்னை தான். காரணம், 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஒரே நாட்டின் மக்கள் தொகை குறைந்துக்கொண்டே போகிறது என்றால் அந்த நாட்டின் மக்கள் தொகை மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. தற்போது அத்தகைய அபாயத்தில் தான் ஜப்பான் உள்ளது. ஜப்பானில் பல ஆண்டுகளாக மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஜப்பானில் இதே நிலை நீடித்தால், இந்த நூற்றாண்டு இறுதிக்குள் ஜப்பான் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து குறையும் மக்கள் தொகை

ஜப்பானில் கடந்த 2022 ஆம் ஆண்டு 125 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 2023 ஆம் ஆண்டு 124.9 மில்லியனாக குறைந்துள்ளது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் தொகை குறைந்துள்ளது. ஜப்பானில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை வெகுவாக குறைய தொடங்கியது. அதன்படி, கடந்த 15 ஆண்டுகளாக ஜப்பானின் மக்கள் தொகை இறங்குமுகத்தில் உள்ளது. ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாததே இதற்கு முதல் காரணமாக கருதப்படுகிறது. ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கையே அதிகம் உள்ல நிலையில், ஜப்பானின் இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் ஜப்பானின் மக்கள் தொகை பாதியாக குறைய வாப்புள்ளது.

இதையும் படிங்க : உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? முழு விவரம் இதோ!

ஜப்பானில் அதிகரிக்கும் அந்நிய நாட்டினர் மக்கள் தொகை

இந்த நிலையில் ஜப்பானின் அந்நிய நாட்டினரின் மக்கள் தொகை கனிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஜப்பானில் 11% அந்நிய நாட்டு மக்கள் வசித்து வருகின்றனர். அதாவது ஜப்பான் மக்கள் தொகையில், சுமார் 3% மக்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாக ஜப்பானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கபடுவதாகவும், ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : “எங்களுக்கு Rules கிடையாது”.. உலகில் சட்ட திட்டங்களே இல்லாத பகுதிகள் இவை தான்.. இதில் இந்திய பகுதியும் உள்ளது!

குழந்தை பிறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது

ஜப்பானிய இளைஞர்கள் திருமண உறவில் ஆர்வம் செலுத்தாத நிலையில், அங்கு குழந்தை பிறப்பு சதவீதமும் குறைவாகவே உள்ளது. ஜப்பானில் அதிகம் முதியவர்களே இருக்கும் பட்சத்தில், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவிலை என்றால் நாட்டின் மக்கள் தொகை நிலமை மிகவும் மோசமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!