5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆடிப்போன ஜப்பான்.. 2 நாளில் உயிரைப் பறிக்கும் மர்ம நோய்.. பீதியில் உலக நாடுகள்!

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜப்பானில் அரிய வகை நோய் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை தவிர ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளும் இந்த நோய் தாக்குதல் குறித்து உலக சுகாதார அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு இந்த வகை நோய் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆடிப்போன ஜப்பான்.. 2 நாளில் உயிரைப் பறிக்கும் மர்ம நோய்.. பீதியில் உலக நாடுகள்!
பாக்டீரியா (மாதிரிப்படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Jun 2024 12:32 PM

2 நாளில் உயிரைப் பறிக்கும் மர்ம நோய்: கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜப்பானில் அரிய வகை நோய் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சதை உண்ணும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் 48 மணி நேரத்திற்குள் நோயால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காலி செய்து விடுகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கால் டாக்ஸிக் ஷாக் சின்றோம் என்னும் இந்த நோயால் இந்த ஆண்டு மட்டும் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய தொற்றுநோய் மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மொத்தமாகவே 941 பேர் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஆறு மாதங்களிலேயே அந்த எண்ணிக்கையை கடந்து விட்டது.

குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொண்டையில் வீக்கமும் புண்ணும் ஏற்படும். இந்த அறிகுறியை ‘strep throat’ என அழைக்கிறார்கள். இந்த வகை பாக்டீரியாவால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், நசிவு, சுவாச பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்படலாம்.

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜப்பானில் அரிய வகை நோய் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சதை உண்ணும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் 48 மணி நேரத்திற்குள் நோயால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காலி செய்து விடுகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கால் டாக்ஸிக் ஷாக் சின்றோம் என்னும் இந்த நோயால் இந்த ஆண்டு மட்டும் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய தொற்றுநோய் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மொத்தமாகவே 941 பேர் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஆறு மாதங்களிலேயே அந்த எண்ணிக்கையை கடந்து விட்டது. குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொண்டையில் வீக்கமும் புண்ணும் ஏற்படும். இந்த அறிகுறியை ‘strep throat’ என அழைக்கிறார்கள்.

பீதியில் உலக நாடுகள்: 

இந்த வகை பாக்டீரியாவால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், நசிவு, சுவாச பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்படலாம். டோக்கியோ பெண்கள் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் துறை பேராசிரியராக உள்ள கென் கிகுச்சி, இது குறித்து குறிப்பிடுகையில், “பெரும்பாலான இறப்புகள் 48 மணி நேரத்திற்குள் நிகழ்கின்றன. ஒரு நோயாளி காலையில் பாதத்தில் வீக்கத்தைக் கண்டவுடன், அது மதியம் முழங்கால் வரை விரிவடையும், மேலும் 48 மணி நேரத்திற்குள் அவர்கள் இறக்கலாம்.

தற்போதைய தொற்று விகிதத்தில், ஜப்பானில் இந்த ஆண்டு 2,500 இதனால் பாதிக்கப்படலாம் என என கணக்கிடப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் 30% வரை பதிவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே நோய் வராமல் இருக்க கைகளை சுகாதாரமாகப் பேணுவதையும் திறந்த காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் உறுதி செய்யுமாறு மக்களை வலியுறுத்துகிறேன்” என்றார்.

ஜப்பானை தவிர ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளும் இந்த நோய் தாக்குதல் குறித்து உலக சுகாதார அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு இந்த வகை நோய் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Also Read: