5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Nobel Prize: அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு.. ஜப்பான் அமைப்பிற்கு அமைத்திக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Nobel Prize: அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு.. ஜப்பான் அமைப்பிற்கு அமைத்திக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Oct 2024 16:01 PM

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்தந்த துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமைப்பின் விவரம்:

1945ஆம் ஆண்டு 2ஆம் உலகப்போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா அணுக் குண்டை வீசியது. இதன் அடிப்படையில்  1956ஆம் ஆண்டு நிஹான் ஹிடாங்கியோ அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு அணு ஆயுதங்களின் பேரழிவு குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

குண்டுவெடிப்பு நடந்து 80 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அணு ஆயுதங்கள் உலகளாவிய அச்சுறுத்தலைத் தொடர்கின்றன. உலக அமைதிக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரோன் – ஈரான் நாடுகளில் போர் சூழல் நிலவி வருகிறது.   இந்த நேரத்தில் உலக அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பான்  அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read: புளோரிடாவை புரட்டி போட்ட மில்டன் சூறாவளி.. முகாம்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!

அணு ஆயுதங்களுக்கு உலகளாவிய எதிர்ப்பை உருவாக்குவதற்கும் அதை நிலைநிறுத்துவதற்கும் நிஹான் ஹிடான்கியோ அமைப்பு அசைக்க முடியாத முயற்சி என்று நோபல் கமிட்டி பாராட்டியது. ஆயுதங்களால் ஏற்படும் புரிந்துகொள்ள முடியாத வலி மற்றும் துன்பங்களைப் பற்றிய தனிப்பட்ட புரிதலை வழங்கியுள்ளது என்று கூறியது.

அமைதிக்கான நோபல் பரிசு:

மற்ற நோபல் பரிசை காட்டிலும் அமைதிக்கான நோபல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய மனித உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக 2009ஆம் ஆண்டு அனைவருக்கு தெரிந்த அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் தூதுர உறவை மேம்படுத்தியதற்கும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர் எடுத்த அசாதாரண முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, 2024 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ்  அறிவித்துள்ளது.

அதன்படி டேவிட் பேக்கர்,  டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய மூன்று பேருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதில் டேவிட் பேக்கருக்கு கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது. அதேபோல் புரத அமைப்புகளை அதன் அமினோ அமில வரிசையிலிருந்து கணித்ததற்காக டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய இருவருக்கும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Also Read: பிரதமர் மோடி பரிசாக கொடுத்த காளி கோயில் கிரீடம் திருட்டு!

இந்த நோபல் பரிசு புகழ்பெற்ற வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் நினைவாக இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1895 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், 1901 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக நோபல் பரிசு முதல்முறையாக வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல் நினைவுத் தினம் அன்று வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News