America Election 2024 : அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்.. ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்!
அதிபர் தேர்தல் : அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் தற்போதை அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட இருந்தது. ஆனால் ஜோ பைடனின் வயது மூப்பு காரணமாக அவர் கடும் எதிர்ப்பிற்குள்ளானார்.
தேர்தலில் இருந்து விலகினார் பைடன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக, தற்போதைய அதிபர் ஜோ படைன அறிவித்துள்ளார். சொந்த கட்சியின் தொடர் அழுத்தத்தின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நாட்டின் நலன், ஜனநாயக கட்சியின் நலன் மற்றும் தமது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். தான் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிட பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் தற்போதை அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட இருந்தது. ஆனால் ஜோ பைடனின் வயது மூப்பு காரணமாக அவர் கடும் எதிர்ப்பிற்குள்ளானார். டொனால்ட் டிரம்புடனான முதல் நேரடி விவாதத்தில் பைடன் தடுமாறிய நிலையில், அவர் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் தானே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பைடன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பைடனுக்கு எழுந்த தொடர் எதிர்ப்புகள்
சமீப காலமாக ஜோ பைடனின் வயது மூப்பு காரணமாக அவரது பேச்சிலும், செயலிலும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன. ஆட்களே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது, மேடையில் பேசாமல் நீண்ட நேரம் யோசிப்பது, மேடையில் ஏற தடுமாறுவது, சம்மந்தமே இல்லாமல் பேசுவது என அவரது பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகி வந்தன. இதனை காரணமாக கொண்டு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சொந்த கட்சியினறே வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமன்றி ஜோ பைடனுக்கு பதிலாக இந்திய வம்சாவளியான துணை அதிபர், கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க : Today’s Top News Headlines: அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
கமலா ஹாரிஸை முன்மொழிந்த பைடன்
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக டிரம்பின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. பரபரப்பான தேர்தல் களத்தில், ஜோ பைடன் நீடிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ படைன் தற்போது அறிவித்துள்ளார். ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகிய நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஜோ பைடன் கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.