5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்ற இருவர்.. எதற்காக தெரியுமா?

"AI இன் காட்பாதர்" என்று பரவலாக அறியப்படும் ஜெஃப்ரி இ ஹிண்டன் ஜான் ஹாப்ஃபீல்டுடன் விருதை பகிர்ந்து கொள்கிறார். செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் அடிப்படையிலான இயந்திர கற்றல் தற்போது அறிவியல், பொறியியல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜெஃப்ரி ஹிண்டன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணிபுரிந்தார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வழங்கி வருகிறார்.

Nobel Prize 2024: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்ற இருவர்.. எதற்காக தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Oct 2024 18:38 PM

இயற்பியலுக்கான நோபல் பரிசு: 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட், ஜாஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலமாக இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

Also Read:  AIADMK: RSS பேரணியை தொடங்கி வைத்த அதிமுக எம்.எல்.ஏ – சஸ்பெண்ட் செய்த இபிஎஸ்!

“AI இன் காட்பாதர்” என்று பரவலாக அறியப்படும் ஜெஃப்ரி இ ஹிண்டன் ஜான் ஹாப்ஃபீல்டுடன் விருதை பகிர்ந்து கொள்கிறார். செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் அடிப்படையிலான இயந்திர கற்றல் தற்போது அறிவியல், பொறியியல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜெஃப்ரி ஹிண்டன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணிபுரிந்தார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வழங்கி வருகிறார். இரண்டு மாணவர்களுடன் சேர்ந்து, அவர் ஒரு நரம்பியல் வலையமைப்பை உருவாக்கினார். இது ChatGPT, Bing மற்றும் Bard போன்றவைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் AI மாதிரிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இருப்பினும், AI இன் சாத்தியமான ஆபத்துகள் குறித்து ஹிண்டன் அறிந்து வைத்துள்ளார்.

Also Read:  திருப்பூரை அதிர வைத்த சம்பவம்.. நாட்டுவெடி வெடித்து குழந்தை உட்பட 3 பேர் பலி

AI மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2023ல் கூகுளில் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்தார். தொடர்ந்து விலகவும் செய்தார்.  இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு நேர்காணலில் ஜெஃப்ரி ஹிண்டன் பங்கேற்றார். அப்போது AI மனிதர்களைக் கையாளும் திறனைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதித்தார். மேலும் மனித நுண்ணறிவை விஞ்சக்கூடிய அமைப்புகளின் வளர்ச்சியை அவர் எடுத்துரைத்தார். இந்த AI இலக்கியம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பிரிவுகளில் பரந்த அறிவை அணுகும் போது,மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

நோபல் பரிசு உருவான வரலாறு

புகழ்பெற்ற வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் நினைவாக தான் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல பிரிவுகளில் இந்த விருதானது வழங்கப்படுகிறது. 1895 ஆம் ஆண்டில் இருந்து நோபல் பரிசு முறை தொடங்கப்பட்டாலும் முதல்முறையாக 1901 ஆம் ஆண்டு தான் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் தங்கப்பதக்கத்துடன் கூடிய ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் சார்பில் பணமும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல் நினைவுத் தினத்தில் வழங்கப்படும். இந்த நோபல் பரிசினை தமிழர்களான சர்.சி.வி.இராமன் 1930ஆம் ஆண்டும், சுப்பிரமணியன் சந்திரசேகர் 1983 ஆம் ஆண்டும், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News