கனடா இந்து கோயில் மீது தாக்குதல்.. காலிஸ்தானியர்களுக்கு வலுக்கும் கண்டனம்.. நடந்தது என்ன?
இந்த ஆண்டு ஜூலையிலும் ஒரு இந்து கோயில் குறிவைக்கப்பட்டது. எட்மன்டனில் இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டும் கனடாவில் இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அதிகம் பதிவானது. குறிப்பாக லட்சுமி நாராயண கோயில் குறிவைக்கப்பட்டது. அதன் வாயில் மற்றும் பின்புற சுவரில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் உள்ள இந்துக் கோயிலில் நடந்த வன்முறை மற்றும் சண்டை சம்பவம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டொராண்டோவிற்கு அருகில் உள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் இந்திய விரோத சக்திகளாக கருதப்படும் காலிஸ்தானியர்கள் மேற்கொண்ட வன்முறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் என்றும், இந்திய குடிமக்களின் பாதுகாப்பில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்:
Very disturbing images! #Khalistanis have attacked devotees at #HinduSabhaTemple , Brampton. This is unacceptable! @PeelPolice @patrickbrownont @JustinTrudeau @fordnation – Take action and protect Canadians pic.twitter.com/FN18xY2rBT
— HinduForumCanada #HFC (@canada_hindu) November 3, 2024
கனடாவில் இந்துக்களும் அவர்களது கோவில்களும் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் தாக்கப்படுகிறார்கள். கனடாவில் இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற பல வழக்குகள் வந்துள்ளன. சில சமயங்களில் கோயில்களின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் மரணத்திற்குப் பிறகு, கனடாவில் இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. ஜூன் 2023 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Also Read: 2 மாதங்களில் 48 லட்சம் திருமணங்கள்.. ரூ. 6 லட்சம் கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு!
இந்த ஆண்டு ஜூலையிலும் ஒரு இந்து கோயில் குறிவைக்கப்பட்டது. எட்மன்டனில் இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டும் கனடாவில் இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அதிகம் பதிவானது. குறிப்பாக லட்சுமி நாராயண கோயில் குறிவைக்கப்பட்டது. அதன் வாயில் மற்றும் பின்புற சுவரில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்:
The acts of violence at the Hindu Sabha Mandir in Brampton today are unacceptable. Every Canadian has the right to practice their faith freely and safely.
Thank you to the Peel Regional Police for swiftly responding to protect the community and investigate this incident.
— Justin Trudeau (@JustinTrudeau) November 3, 2024
இந்த சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த வன்முறை சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும். கனடாவில் வாழும் அனைத்து குடிமக்களும் தங்கள் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்க சுதந்திரமாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்து சமூகத்தைப் பாதுகாக்கவும், இந்தச் சம்பவத்தை விசாரிக்கவும் உடனடியாகப் நடவடிக்கைகளை மேற்கொண்ட பீல் பிராந்திய காவல்துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நேப்பான் எம்பி சந்திரா ஆர்யாவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவ்கில், “இன்று காலிஸ்தானி ஆதரவாளர்கள் சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளனர். பிரம்டனில் உள்ள இந்து சபா கோவில் வளாகத்தில் உள்ள இந்து-கனடிய பக்தர்கள் மீது காலிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதல், கனடாவில் காலிஸ்தானி வன்முறை தீவிரவாதம் எவ்வளவு ஆழமாகவும் வேகமாகவும் மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. கனேடிய அரசியல் எந்திரத்திற்கு மேலதிகமாக, காலிஸ்தானியர்கள் நமது சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்களுக்குள் திறம்பட ஊடுருவியதாகக் கூறப்படும் செய்திகளில் ஒரு சிறிய அளவு உண்மை இருப்பதை நான் உணரத் தொடங்குகிறேன்.
Also Read: இந்திய ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் பயன்படுத்தலாமா? ரூல்ஸ் இதுதான்!
கனடாவில் ‘கருத்துச் சுதந்திரத்தின்’ கீழ் காலிஸ்தானி தீவிரவாதிகள் இலவச அனுமதி பெறுவதில் ஆச்சரியமில்லை. நான் நீண்ட காலமாகச் சொல்லி வருவது போல், இந்து-கனடியர்கள், நமது சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, முடுக்கிவிட வேண்டும் மற்றும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.