Kamala Vs Trump : கமலா ஹாரிஸ் Vs டொனால்ட் டிரம்ப்.. நேருக்கு நேர் அனல் பறந்த விவாதம்!
Election Debate | இதுவரை தனித்தனி மேடைகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இருவரும் முதல் முறையாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். அவ்வாறு கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஒரே மேடையில் உரையாற்றிய வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் : அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனல்ட் டிரம்ப் நேரடி விவாதம் நடத்தினர். இதுவரை தனித்தனி மேடைகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இருவரும் முதல் முறையாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். அவ்வாறு கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஒரே மேடையில் உரையாற்றிய வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வு எப்படி நடைபெற்றது, பிரசாரத்தில் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : CM MK Stalin: தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் – முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உரை
டிரம் உடனான நேரடி விவாதத்தில் பேசிய கமலா ஹாரிஸ், நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த திட்டங்கள் என்னிடமே உள்ளன. பணக்காரர்களுக்கு மட்டுமே டிரம்ப் பரிசலுகை கொடுத்ததால் டிரம்ப் ஆட்சியிலிருந்து செல்லும்போது வேலைவாய்ப்பின்மை மோசமாக இருந்தது. டிரம்ப் ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்யவே நான்கு ஆண்டுகளாகிவிட்டது. டிரம்பின் ப்ராஜெக்ட் 2025 திட்டம் மிகவும் ஆபத்தானது, மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார்.
மக்களின் பிரச்னைகள் குறித்து டிரம்ப் பேசவே மாட்டார் – கமலா ஹாரிஸ்
21 ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கும். சீன அதிபருக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்கக் கூடாது. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது, பெண்களின் உடல் மீது அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவை. டிரம்ப் மக்களின் பிரச்சினைகள், கனவுகள் பற்றி பேசவே மாட்டார் என்று தெரிவித்தார்.
🚨DEBATE Trump vs Kamala
Donald Trump: Ela não tem nenhuma política. Tudo o que ela acreditava há 3 anos está fora da janela. Ela está indo para a minha filosofia agora. Na verdade, eu ia enviar a ela um boné MAGA.
Ela é marxista. O pai dela era professor marxista. pic.twitter.com/ZRtH4R3517
— 🔥Kayrus🔥 (@KayrusFenix) September 11, 2024
குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் உரை
கமலா ஹாரிஸை தொடர்ந்து பேசிய குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் இங்கு உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவை உலகின் சிறந்த பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். சீன பொருட்கள் மீது வரிகளை சுமத்தி அரசுக்கு வருவாய் ஈட்டினோம். எனக்கும் ப்ராஜெக்ட் 2025 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றை மிகச் சிறப்பாக கையாண்டோம். என்னுடைய ஆட்சியில் பணவீக்கம் மிகவும் குறைவாக இருந்தது, பைடன் ஆட்சியில் பண வீக்கத்தால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட் அவரிடம் எந்த திட்டமும் இல்லை.
இதையும் படிங்க : Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
இதே நிலை நீடித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் – டிரம்ப்
மிக மோசமான குடியேற்ற கொள்கையால் அமெரிக்க பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துக்களை கூறியவர்கள் ஜனநாயக கட்சியினர். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். வங்கி கடன் ரத்து என மாணவர்களை பைடன் ஏமாற்றினார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. எனது பிரசார கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.