America President Election : டிரம்ப் உடன் மீண்டும் நேரடி விவாதம்.. விருப்பம் தெரிவித்த கமலா ஹாரிஸ்.. மீண்டு இரு துருவங்கள் சந்திக்குமா?

Debate | அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு தனித்தனியாக பிரசாரம் செய்து வந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒரே மேடையில் விவாதம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் இருவரும் விவாதம் நடத்தினர்.

America President Election : டிரம்ப் உடன் மீண்டும் நேரடி விவாதம்.. விருப்பம் தெரிவித்த கமலா ஹாரிஸ்.. மீண்டு இரு துருவங்கள் சந்திக்குமா?

கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் (Picture Credit : Kevin Dietsch/Getty Images and Win McNamee/Getty Images)

Updated On: 

04 Nov 2024 17:10 PM

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரடி விவாதம் நடத்தினர். இந்த நிலையில், 2வது முறையாக மீண்டும் கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதம் நடத்த தயாராக உள்ளதாகவும், டொனால்ட் டிரம்பும் விவாதத்திற்கு ஒப்புகொள்வார் என தான் நம்புவதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Srilanka Presidential Election : விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிக்கும் அனுரகுமார நிஸாநாயக்க!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு தனித்தனியாக பிரசாரம் செய்து வந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒரே மேடையில் விவாதம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் இருவரும் விவாதம் நடத்தினர்.

கமலா ஹாரிஸ் உரை

அப்போது பேசிய கமலா ஹாரிஸ், நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த திட்டங்கள் என்னிடமே உள்ளன. பணக்காரர்களுக்கு மட்டுமே டிரம்ப் வரிசலுகை கொடுத்ததால் டிரம்ப் ஆட்சியிலிருந்து செல்லும்போது வேலைவாய்ப்பின்மை மோசமாக இருந்தது.  டிரம்ப் ஆட்சியில் செய்த தவறுகளை சரி செய்யவே நான்கு ஆண்டுகளாகிவிட்டது. டிரம்பின் ப்ராஜெக்ட் 2025 திட்டம் மிகவும் ஆபத்தானது, மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க : இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!

21 ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கும். சீன அதிபருக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்கக் கூடாது. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது,  பெண்களின் உடல் மீது அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவை. டிரம்ப் மக்களின் பிரச்சினைகள், கனவுகள் பற்றி பேசவே மாட்டார் என்று தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் உரை

இதற்கு பதிலளித்து பேசிய டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் இங்கு உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  அமெரிக்காவை உலகின் சிறந்த பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். சீன பொருட்கள் மீது வரிகளை சுமத்தி அரசுக்கு வருவாய் ஈட்டினோம். எனக்கும் ப்ராஜெக்ட் 2025 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றை மிகச் சிறப்பாக கையாண்டோம். என்னுடைய ஆட்சியில் பணவீக்கம் மிகவும் குறைவாக இருந்தது, பைடன் ஆட்சியில் பண வீக்கத்தால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட் அவரிடம் எந்த திட்டமும் இல்லை.

இதையும் படிங்க : Viral Video : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. தலைக்குப்புற கவிழ்ந்த லாரி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

மிக மோசமான குடியேற்ற கொள்கையால் அமெரிக்க பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துக்களை கூறியவர்கள் ஜனநாயக கட்சியினர். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். வங்கி கடன் ரத்து என மாணவர்களை பைடன் ஏமாற்றினார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. எனது பிரசார கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தான் இனி கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த தயாராக இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமலா, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி இரண்டாவது விவாதத்திற்கு தான் தயாராக உள்ளதாகவும், டிரம்ப் அதற்கு ஒத்துழைப்பார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?