Kamala Harris: ட்ரம்பை அலறவிட்ட கமலா ஹாரிஸ்.. ஒரே அடியில் உயர்ந்த வாக்கு!
Kamala Harris: வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும் அவருக்கு மிகுந்த போட்டி கொடுக்கும் வகையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உள்ளார். இதனிடையே அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணத்தில் ஒன்றான கலிபோர்னியாவில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கமலா ஹாரிஸ்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்று இழுபறி நீடித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும் அவருக்கு மிகுந்த போட்டி கொடுக்கும் வகையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உள்ளார். இதனிடையே அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணத்தில் ஒன்றான கலிபோர்னியாவில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த மாகாணத்தில் கமலா ஹாரிஸ் 46,93,195 வாக்குகளை பெற்றுள்ளார். எலக்ட்ரோல் வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 54 வாக்குகள் கிடைத்துள்ளது. குடியரசு நாடான அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் உலகம் முழுவதுமுள்ள மக்களால் உற்று கவனிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த பிரசாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கமலாவின் பெயர் தொடங்கி அவர் இளம் வயதில் பார்த்த வேலை வரை கடுமையாக கிண்டலடித்து ட்ரம்ப் பேசினார். ஆனால் போட்டி என வந்துவிட்டால் ஒருகை பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் இந்த தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. தற்போதைய அதிபரான ஜோ பைடன் தான் ஜனநாயக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே ஜோ பைடன் சொதப்பியதால் போட்டியிலிருந்து விலக, கமலா ஹாரிஸ் உள்ளே வந்தார்.
Also Read: US Election Results: அமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னிலை!
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு
தற்போது அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இத்தனை முன்னிட்டு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் கடந்த ஓராண்டாகவே அதிபர் தேர்தலுக்கான களப்பணிகள் அனைத்தும் களைகட்டியது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தீவிரமாக பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதை உணர்ந்து இவர்கள் களப்பணி ஆற்றினர். நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பல்வேறு மாகாணங்களில் இருந்த மாறுபட்ட நேரம் காரணமாக இன்று காலை 5:30 மணிக்கு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் டிரம்ப் இருவரும் சமமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ட்ரம்ப் கிடுகிடுவென உயர்ந்தார்.
270 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலக்கை நோக்கி இருவரும் முன்னேறிய நிலையில் கலிபோர்னியாவில் 54 வாக்குகள் கமலா ஹாரிஸுக்கு கிடைத்தது.. இதனால் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த அவர் விறுவிறுவென முன்னேறினார்.
Also Read: 2025ல் வருகிறது Reliance Jio-ன் IPO.. புது பிளானில் அம்பானி குரூப்.. விவரம்!
கோயில்களில் சிறப்பு வழிபாடு
இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். அங்கு கமலஹாரிஸ் வெற்றி பெற வேண்டி நேற்று சிறப்பு பூஜை அவரின் குலதெய்வ கோயிலில் நடைபெற்றது. இந்த பழமையான கோயிலில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் மூன்று பேர் வாக்களித்துவிட்டு கோயிலுக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலை பொருத்தவரை அங்கு மக்கள் நேரடியாக அதிபரை தேர்வு செய்ய முடியாது. ஆனால் வாக்கு அளிக்க முடியும். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திலும் குறிப்பிட்ட எலெக்ட்ரோல் வாக்குகள் முறை உண்டு. மொத்தம் 538 எலக்ட்ரோல் வாக்குகள் இருக்கும் நிலையில் அதில் 270 வாக்கு பெரும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். சில நேரங்களில் மக்களின் வாக்கு அதிகமாக இந்த பதிலும் எலக்ட்ரோல் வாக்கு கிடைக்காமல் தோற்றவர்களும் உண்டு. இப்படியான நிலையில் இன்னும் 100 வாக்குகள் உள்ள நிலையில் அதனை யார் பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.