5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

America Election 2024 : டொனால்டு டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்.. சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்!

Kamala Harris Leading | அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான இப்ஸோ உடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு 2% அதிகமாக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

America Election 2024 : டொனால்டு டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்.. சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்!
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 25 Jul 2024 20:33 PM

அதிபர் தேர்தல் : அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் வயது மூப்பு காரணமாக ஜோ பைடன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் மேடை பேச்சில் டொனால்டு டிரம்பை எதிர்த்து பேசிய பைடன் தடுமாற்றமடைந்தார். மேடை பேச்சுகளின் போது பேசாமல் அமைதியாக இருப்பது, சம்மந்தமே இல்லாமல் பேசுவது, ஆட்களே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது போன்ற ஜோ பைடனின் பல்வேறு வீடியோக்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகின.

அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்

இதன் காரணமாக ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியில் இருந்தே அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு பரபரப்பாக அரசியல் களம் இயங்கிக்கொண்டிருந்த சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதுமட்டுமன்றி தனக்கு பதிலாக இந்திய வம்சாவளி மற்றும் அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸை அவர் முன்மொழிந்தார். அதன்படி டொனால்டு டிரம்பை எதிர்த்து கமலா ன்ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸுக்கு பெருகும் ஆதரவு

இதனை தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய கமலா ஹாரிஸ், தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு காணாத சாதனை படைத்தார். அதன்படி, சுமார் 24 மணி நேரத்தில் பல ஆயிரம் நண்கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 81 மில்லியன் டாலர் நிதி திரட்டினார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.677 கோடி ஆகும். இதில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக தேர்தலுக்கு நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : ஆர்டர் செய்த உணவை திருட்டுத் தனமாக பிரித்து சாப்பிட்ட டெலிவரி பாய்.. கையும் களவுமாகப் பிடித்த நபர்!

டொனால்டு டிரம்பை விட முன்னிலையில் இருக்கும் கமலா ஹாரிஸ்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான “இப்ஸோ” உடன் இணைந்து “ராய்ட்டர்ஸ்” செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு 2% அதிகமாக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் டொனால்ட்டு டிரம்புக்கு 42% பேர் ஆதர்வு தெரிவித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸுக்கு 44% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Paris Olympics 2024: ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிறிய நாடு எது தெரியுமா..? மக்கள் தொகை 34 ஆயிரம் மட்டுமே..!

Latest News