5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

US Presidential Election: அமோக ஆதரவு.. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வானார் கமலா ஹாரிஸ்!

America Election 2024: கமலா ஹாரிஸ் போதுமான வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தேசிய குழு தலைவர் ஜேமி ஹாரிசன் அறிவித்தார். இம்மாதம் 19ஆம் தேதி சிகாகோவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

US Presidential Election: அமோக ஆதரவு.. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வானார் கமலா ஹாரிஸ்!
கமலா ஹாரிஸ்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 03 Aug 2024 08:18 AM

அதிபர் வேட்பாளராக தேர்வானார் கமலா ஹாரிஸ்: உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் 97 வயதான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் ஜனநாயக கட்சி சார்பில் 81 வயதாகும் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக தேர்வான போதிலும், உடல் நிலை காரணமாக அவரால் போட்டியிட முடியாததால் அவர் தேர்தலில் இருந்து விலகினார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரையும் முன்மொழிந்தார். இந்த நிலையில், கமலா ஹாரிஸ் போதுமான வாக்குகளை பெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தேசிய குழு தலைவர் ஜேமி ஹாரிசன் அறிவித்தார். இம்மாதம் 19ஆம் தேதி சிகாகோவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

Also Read: திருடப்பட்டதால் பிரபலமான மோனாலிசா ஓவியம் – என்ன கதை தெரியுமா?

புதிய அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 4,000 ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளாராக தேவையான வாக்குகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதிபர் வேட்பாளராக களமிறங்கும் முதல் கறுப்பின பெண் என வரலாற்று சாதனை படைத்தள்ளார் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் பெருமிதம்:

இதுகுறித்து பேட்டி அளித்த கமலா ஹாரிஸ், “அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரகா நான் இருப்பதில் பெருமை அடைகிறேன். நான் அடத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரச்சார நாட்டின் மீதான நேசத்தால் தூண்டப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடுவது பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

 

Latest News