Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து.. 7 தமிழர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு.. விசாரணை தீவிரம்
Fire Accident : குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்தததாக கூறப்படுகிறது. மேலும், தொடக்கத்தில் இந்தியர்கள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத் தீ விபத்து: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 7 தமிழர்கள் உயிரிழந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. மேலும் தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர். தீயில் கருகியதால் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 16 மலையாளிகளின் உடலை மட்டுமே அடையாளம் கண்டுள்ளனர்.
நடந்தது என்ன?
தெற்கு குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்தததாக கூறப்படுகிறது. மேலும், தொடக்கத்தில் இந்தியர்கள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கேரளாவைத் சேர்ந்த ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “இந்த கட்டிடத்தில் தொழிலாளர்கள் பலரும் தங்கி வந்தனர்
இங்கு அதிகமான தொழிலாளர்கள் இருந்தனர். சுமார் 160க்கும் மேற்பட்டோர் தங்கி இருக்கலாம். முதலில் சமையில் அறையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆபத்தான நிலையில் உள்ள சிலர் உட்பட காயம் அடைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என கூறப்பட்டுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது.
இந்தியா இரங்கல்
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதில் 50 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் முழு உதவிகளையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே குறிப்பிட்ட சின்ன இடத்தில் அதிக நபர்களை தங்க வைத்ததே இவ்வளவு பெரிய உயிரிழப்புக்கு காரணம் என தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.