5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி.. யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?

Brittan Election | பிரிட்டனில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது. அதன்படி கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் அடுத்த பிரதமராகிறார். பிரட்டனில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் தற்போது தொழிலாளர் கட்சி 360 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.

பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி.. யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?
கெய்ர் ஸ்டார்மர்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 05 Jul 2024 11:30 AM

பிரிட்டன் அதிபர் தேர்தல் : பிரிட்டன் அதிபர் தேர்தலில் தொழிலாளர்கள் கட்சி பெரும்பான்மையான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், பிரிட்டனின் புதிய அதிபராகறார் கெய்ர் ஸ்டார்மர். தொழிலாளர் கட்சியின் இந்த வெற்றி கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சியை முறியடிக்கும் என கூறப்படுகிறது. ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி அடைந்தது. பிரிட்டன் பாராளுமன்றத்திள் 650 தொகுதிகளில், தொழிலாளர் கட்சி 326-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தொழிலாளர் கட்சி சுமார் 410 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

என்னதான் கியர் ஸ்டார்மர் தேர்தலில் அபார வெற்றி பெற்றாலும், பிரிட்டன் மக்களுக்கு ஸ்டார்மர்  மீதும் அவரது கன்சர்வேடிவ் கட்சி மீதும் பெரிய ஈடுபாடு இல்லை என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதால் ஸ்டார்மர் ஆட்சியை பிடித்தாலும், நாட்டின் தற்போதைய நிலை அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனின் முந்தைய அதிபராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பதவி வகித்தார். ஆனால் தற்போது ரிஷி சுனக்கின் கட்சி வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. வடக்கு லண்டனில் தனது இடத்தை தக்கவைத்து கொண்ட பின் மக்களிடம் பேசிய கெய்ர் ஸ்டார்மர், “மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது ஏனென்றால் இதுதான் ஜனநாயகம் மற்றும் உங்கள் எதிர்காலம் என தெரிவித்தார். நீங்கள் எங்களுக்காக வாக்களித்துள்ளீர்கள், நாங்களை அதற்கு திருப்பி செய்யும் நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : UK Election 2024: பிரிட்டனில் வாக்குப்பதிவு… சவால்களை சமாளித்து வெற்றி பெறுவாரா ரிஷி சுனக்?

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?

  • கெய்ர் ஸ்டார்மர் 1962-ல் லண்டனில் பிறாந்தவர்.
  • இளம் வயது முதலே அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் தனது 16வது வயதில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.
  • ஸ்டார்மர் சிறந்த கல்வி தகுதி கொண்டவர். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டமும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சிவில் சட்டத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
  • அரசியலில் நுழைவதற்கு முன்பு ஸ்டார்மர், மனித உரிமை ஆர்வளராக இருந்தார்.
  • ஸ்டார்மர் 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பொது வழக்குகளின் இயக்குநராக பணியாற்றினார்.
  • அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஹவுஸ் ஆஃப் காமன்ஸூக்கு ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஸ்டார்மர் 2016 பிரெக்சிட் வாக்கெடுப்பின் போது தோல்வியுற்ற பிரிட்டன் ஸ்ட்ராங்கரின் ஐரோப்பா பிரசாரத்தை ஆதரித்தார்.
  • ஆனால் பிறகு ஜெர்மி கார்பின் தலைமையினான இரண்டாவது வாக்கெடுப்புக்கு வாதிட்டார்.
  • கோர்பின் ராஜனாமா செய்த பிறகு, ஸ்டார்மர் கடந்த 2020-ல் தொழிலாளர் கட்சி தலைமை தேர்தல் இடதுசாரி தளத்தில் வெற்றி பெற்றார்.

Latest News