Air Pollution : பாகிஸ்தானில் கடும் காற்று மாசு.. பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை!
Pakistan | காற்று மாசு குறித்து ஸ்விஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காற்று மாசு கொண்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவிய கடும் காற்று மாசை தொடர்ந்து, கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அதிக காற்று மாசு கொண்ட பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது.
காற்று தரவரிசை குறியீடு (AQI) தரவுகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக லாகூர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின், லாகூர் நகரத்தில் நேற்று (03.11.2024) காற்றின் மாசு சுமார் 1900 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த மிக கடுமையான காற்று மாசு பல்வேறு சுகாதார மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : Nasa Voyager 1: தொடர்பை இழந்த நாசாவின் வாயேஜர் 1 விண்கலம்.. மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது எப்படி?
முக்கிய பிரச்னையாக உருவெடுக்கும் காற்று மாசு
உலகில் பண வீக்கம், பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விட மிக முக்கிய பிரச்னையாக இந்த காற்று மாசு உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளை போலவே இந்த காற்றும் மாசும் மிக பயங்கர தாக்கத்தை ஏற்படுத்த கூடியது. காற்று மாசு சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை மிக கடுமையாக பாதிக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாகவே காற்று மாசை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பல நாடுகள் போராடி வருகின்றன.
இதையும் படிங்க : கனடா இந்து கோயில் மீது தாக்குதல்.. காலிஸ்தானியர்களுக்கு வலுக்கும் கண்டனம்.. நடந்தது என்ன?
காற்று மாசால் திணறும் தலைநகர் டெல்லி
இந்த நிலையில் இந்தியா காற்று மாசு விவகாரத்தில் கடும் சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. சுவாசக் கோளாறு உள்ளிட்ட மூச்சு தொடர்பான பல உடல்நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அங்கு அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாகன கட்டுப்பாடு, பொது போக்குவரத்து எல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் சிக்கலை கண்டுபிடித்த கோவை மாணவர்.. மெட்டா நிறுவனம் கொடுத்த வெகுமதி!
உலகின் அதிக காற்று மாசு கொண்ட இரண்டாவது நகரம்
காற்று மாசு குறித்து ஸ்விஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காற்று மாசு கொண்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலவிய கடும் காற்று மாசை தொடர்ந்து, கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அதிக காற்று மாசு கொண்ட பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. லாகூரில் காற்று மாசின் நிலமை மிக மோசமாக இருப்பதால் அங்கு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, லாகூரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : US President Election: நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.. எப்படி வாக்குப்பதிவு நடக்கும் தெரியுமா?
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேர வேண்டாம் – அரசு எச்சரிக்கை
அரசு பள்ளிகளுக்கு ஒரு வார, விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் மாஸ்க் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் மூத்த அமைச்சர், நிலமையின் தீவிரத்தை உணர்ந்து 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதேபோல பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.