5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? முழு விவரம் இதோ!

Strongest Passports | லண்டனை சேர்ந்த குடியிருப்பு மற்றும் குடியுரிமை குறித்த ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இண்டக்ஸ் 2024-ன் அந்த அறிக்கை படி, சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 24 Jul 2024 17:09 PM

சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் : லண்டனை சேர்ந்த குடியிருப்பு மற்றும் குடியுரிமை குறித்த ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இண்டக்ஸ் 2024-ன் அந்த அறிக்கை படி, சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அது 195 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை வழங்கியுள்ளது. இரண்டாவது இடத்தில் மொத்தம் 5 நாடுகள் உள்ளன. அவை, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜெப்பான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் ஆகும். இந்த நாடுகள் 192 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 82 வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 82 வது இடத்தில் இந்தியாவுடன் செனிகல் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்தியா உள்ளிட்ட இந்த 3 நாடுகளும் 58 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்கு அனுமதி வழங்கியுள்ளன. இதேபோல மாலத்தீவும் 58வது இடத்தில் உள்ளது. அது 96 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனா 59 வது இடத்தில் உள்ளது. சீனா, மொத்தம் 85 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. பட்டியலில் கடைசியாக அஃப்கானிஸ்தான் உள்ளது. இது 26 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்குகிறது.

ஹென்லி பாஸ்போர்ட் இண்டக்ஸ் 2024 ஜூலை மாத ஆய்வில் மொத்தம் 199 பாஸ்போர்ட்கள் மற்றும் 227 இடங்கள் கணக்கில் எடுக்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க : Flight Accident : நேபாள விமான விபத்து.. விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பயணிகள் பலி!

2024 ஆம் ஆண்டின் உலகின் மிகச் சிறந்த 10 பாஸ்போர்ட்கள்

  1. சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்க அனுமதி.
  2. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் – 192 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  3. ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன் – 191 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  4. பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து – 190 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  5. ஆஸ்திரேலியா, போர்சுகல் – 189 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  6. க்ரீஸ், போலாந்து – 188 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  7. கனடா, ஹங்கேரி மற்றும் மால்டா – 187 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  8. உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் அமெரிக்கா 8 வது இடத்தில் உள்ளது. இது 182 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  9. எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் அரபு நாடு – 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.
  10. ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா – 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி.

Latest News