5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ven Ajahn Siripanyo: ரூ.45 ஆயிரம் கோடி சொத்து வேண்டாம்.. துறவியாக வாழும் மலேசிய தொழிலதிபர் மகன்!

வென் அஜான் சிரிபான்யோ சிரிபான்யோ தனது வாழ்க்கையில் ஆரம்பத்தில் சில ஆண்டுகளை லண்டனில் தனது இரண்டு சகோதரிகளுடன் கழித்தார், இங்கிலாந்தில் தான் கல்வி பெற்றார். இதன்மூலம் அவரது கற்றல் மட்டுமல்லாமல் தேடலும் அதிகரித்தது.

Ven Ajahn Siripanyo: ரூ.45 ஆயிரம் கோடி சொத்து வேண்டாம்.. துறவியாக வாழும் மலேசிய தொழிலதிபர் மகன்!
ஆனந்த கிருஷ்ணன் – வென் அஜான் சிரிபான்யோ
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Nov 2024 14:20 PM

மலேசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் அந்நாட்டின் 3வது பெரிய கோடீஸ்வரர் ஆவார். தொலைத்தொடர்பு, சேனல், ஊடகம், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் என பல துறைகளில் முத்திரை பதித்த ஆனந்த கிருஷ்ணன் மலேசிய வாழ் தமிழராவார். 86 வயதான அவர் தான் மலேசியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான Maxis Berhad உரிமையாளராக திகழ்ந்தார். அவரது மறைவு தொடர்பாக ஆனந்த கிருஷ்ணனின் முதலீட்டு நிறுவனமான உசாஹா டெகாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மலேசிய நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, கார்ப்பரேட் உலகிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆனந்த கிருஷ்ணன் செய்துள்ளார்.  மேலும் அவரது தைரியமான முயற்சிகள் பலரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AK என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனுக்கு ரூ. 45000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பௌத்த மதத்தை தீவிரமாக பின்பற்றி வந்தார். இது அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்தது. பல கோடி சொத்துகளுக்கு வாரிசான ஆனந்த கிருஷ்ணனின் மகன் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தன்னுடைய 18 வயதில் துறவறம் மேற்கொள்வதாக தடாலடியாக முடிவெடுத்தவர். இது அப்போது உலகளவில் பேசுபொருளாக மாறியது.

Also Read: ரயில் டிக்கெட்டில் பெயர் தப்பாகிடுச்சா? கவலைய விடுங்க.. இப்படி மாற்றுங்க!

துறவறம் மேற்கொள்ள காரணம் என்ன?

வென் அஜான் சிரிபான்யோ என பெயர் கொண்ட அந்த இளைஞன் பற்றி தெரிந்து கொள்ளும் முன் சில தகவல்களை நாம் அறிய வேண்டும். ஆனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன், தாய்லாந்து அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அதனால் பிறக்கும்போது மட்டுமல்லாமல் செல்வ செழிப்போடு தான் வென் அஜான் சிரிபான்யோ வளர தொடங்கினார்.

வென் அஜான் சிரிபான்யோ சிரிபான்யோ தனது வாழ்க்கையில் ஆரம்பத்தில் சில ஆண்டுகளை லண்டனில் தனது இரண்டு சகோதரிகளுடன் கழித்தார், இங்கிலாந்தில் தான் கல்வி பெற்றார். இதன்மூலம் அவரது கற்றல் மட்டுமல்லாமல் தேடலும் அதிகரிக்க தொடங்கியது. பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான புரிதலை அவருக்குள் வளர்த்தது. இதனைத் தொடர்ந்து பௌத்த போதனைகள் மூலம் அவர் தன் வாழ்க்கையின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். பன்முக கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த வென் அஜான் சிரிபான்யோ ஆங்கிலம், தமிழ் மற்றும் தாய் மொழி உட்பட குறைந்தது 8மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்

20 ஆண்டுகளாக ஒரு வனத் துறவியாக இருக்கும் வென் அஜான் சிறிபான்யோ எளிமையான வாழ்க்கையைப் பின்பற்றி வருகிறார். பௌத்த நடைமுறைகளை முழுவதுமாக கடைப்பிடிக்கிறார். அவரது குடும்பத்தினரும் பௌத்தத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் சிறிபான்யோ முடிவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். Dtao Dum என்ற மடாலயத்தில் அதன் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வென் அஜான் சிறிபான்யோ வாழ்ந்து வருகிறார். அவர் துறவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சிரிபான்யோ எப்போதாவது அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். குடும்ப பிணைப்புகளின் முக்கியத்துவம் குறித்த புத்த போதனைகளை எடுத்துக்காட்டுகிறார்.

Also Read: Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!

ஆன்மீகத்தின் பிரதிபலிப்பு

இத்தாலியில் உள்ள தனது தந்தையைப் பார்க்க தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவது போன்ற தேவைப்படும் போது அவர் ஆடம்பரமாக பயணம் செய்வதாக சொல்லப்படுகிறது. அவரது தந்தை மலேசியாவின் பினாங்கு மலையில் சிரிபான்யோவின் ஒரு வருகையின் போது அவரது வசதிக்காக ஒரு ஆன்மீக ஓய்வு கூடம் இன்றை வாங்கினார். நவீன காலத்தில் வென் அஜான் சிரிபான்யோவின் வாழ்க்கைப்பாதை தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரியில் உள்ள ஜூலியன் மேன்டில் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது பயணம் அதன் நிஜ வாழ்க்கை தாக்கங்களில் தனித்துவமானதாக உள்ளது. பல துறவு வாழ்க்கையை மேற்கொள்பவர்களின் கதைகளைப் போல் அல்லாமல் சிரிபான்யோவின் முடிவு தனிப்பட்ட நம்பிக்கையை மட்டுமல்ல, நவீன கால ஆன்மீக விழுமியங்களின் தடையற்ற ஒருங்கிணைப்பையும் பிரதிபலிப்பதாக உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

Latest News