திண்டாடும் பொருளாதாரம்..”தயவு செய்து வாங்க..” இந்தியர்களிடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!
இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாலத்தீவு – இந்தியா உறவு:
மாலத்தீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்லில் முய்சு வென்றது முதலே இந்தியா-மாலத்தீவு இடையே நிலவி வந்த சுமூகமான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம், இந்திய-மாலத்தீவுக்கு இடையேயான பிரச்னையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றது.
அதாவது, மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவை சுற்றுலா தளமாக பிரதமர் மோடி அங்கு சென்றதாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, இந்தியர்கள் பலரும் தங்களது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர்.
“தயவு செய்து வாருங்கள்”
இதனால், மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்த நிலையில், இந்தியவர்களுக்கு மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த மாலத்தீவு அமைச்சர் இப்ராஹிம் பைசல், “எங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசும், இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது.
Also Read : சாதனை படைக்க காத்திருந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு அதிர்ச்சி.. விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ரத்து!
நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். இந்திய வருகையாளர்களுக்கு எமது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள்.
சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், மாலத்தீவு சுற்றுலாவுக்கு இந்தியர்கள் தயவு செய்து வாருங்கள். எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும்” என்றார்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிகை குறைவு:
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் வரை இந்தியாவில் இருந்து 73,785 சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால், இந்தாண்டு இதே காலக்கட்டத்தில் வெறும் 42,638 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே சென்றுள்ளனர்.
இந்தாண்டு மே 4ஆம் தேதி வரை 43,991 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். அதாவது, இந்தாண்டு முதல் நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து மாலத்தீவு சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 42 சதவீத குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : மீண்டும் ரஷ்யாவை ஆளப்போகும் புதின்… 5வது முறையாக இன்று பதவியேற்பு!