5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Milton Hurricane : புளோரிடாவை புரட்டி போட்ட மில்டன் சூறாவளி.. முகாம்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!

Traffic Issue | அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புளோரிடா மாகாண ஆளுநர் ஆகியோர் சூறாவளி குறித்து எச்சரித்த நிலையில், மாகாணத்தில் வசிக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக புளோரிடாவை விட்டு வெளியேற முயற்சித்தனர். இதனால அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, புளோரிடா மாகாணமே ஸ்தம்பித்திப்போனது.

Milton Hurricane : புளோரிடாவை புரட்டி போட்ட மில்டன் சூறாவளி.. முகாம்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!
புளோரிடா சூறாவளி
vinalin
Vinalin Sweety | Published: 11 Oct 2024 13:08 PM

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தை கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மில்டன் சூறாவளி கடுமையாக தாக்கியுள்ள நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அர்சாங்கத்தின் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூறாவளி தாக்குதலின் காரணமாக புளோரிடா மாகாணமே மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. புளோரிடா கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?

புளோரிடாவை புரட்டி போட்ட மில்டன் புயல்

அமெரிககவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய மில்டன் சூறாவளி, அந்த மாகாணத்தையே நிலைகுலைய செய்துள்ளது. சூறாவளி தாக்குதலின் காரணமாக வீடு மற்றும் உடைமைகளை இழந்த சுமார் 80,000 மக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளியில் சிக்கி செயின்ட் லூசி கவுன்ட்டியின் கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் புளோரிடாவின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு இன்றி சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : Nobel Prize: இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற தென் கொரிய பெண்.. யார் இவர்?

புளோரிடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் – மாகாண ஆளுநர்

ஏற்கனவே புளோரிடா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று அந்த மாகாணத்தின் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, சில வாரங்களுக்கு முன்பு புளோரிடாவை தாக்கிய ஹெலன் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பை விட தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மிக குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Israel Hamas War: இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்.. ஓராண்டாகியும் தீராத மரண ஓலம்.. பற்றி எரியும் மத்திய கிழக்கு..

அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சூறாவளி

தற்போது புளோரிடாவை தாக்கியுள்ள மில்டன் சூறாவளி அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் 5வது வகை சூறாவளி என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூறாவளி மணிக்கு சுமார் 270 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய நிலையில், புளோரிடா கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. சூறாவளியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதுவரை பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மக்களை வெளியேற்றும் பணியை அம்மாகாண அரசு மேற்கொண்டது. அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது வாழ்வா சாவா என்ற போராட்டம், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரித்தார். இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் 80,000 மக்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : ஆசிரியையின் கால்களை மசாஜ் செய்த அரசு பள்ளி மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புளோரிடா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புளோரிடா மாகாண ஆளுநர் ஆகியோர் சூறாவளி குறித்து எச்சரித்த நிலையில், மாகாணத்தில் வசிக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக புளோரிடாவை விட்டு வெளியேற முயற்சித்தனர். இதனால அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, புளோரிடா மாகாணமே ஸ்தம்பித்திப்போனது.

இதையும் படிங்க : Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

புளோரிடாவின் ஒருசில பகுதிகளை தவிர, ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலைனா பகுதிகளிலும் மில்டன் சூறாவளி மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News