Miss Universe 2024 : மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற டென்மார்க் அழகி.. யார் இவர்? - Tamil News | miss universe 2024 winner is Denmark victoria kjaer theilvig who is she | TV9 Tamil

Miss Universe 2024 : மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற டென்மார்க் அழகி.. யார் இவர்?

Updated On: 

17 Nov 2024 11:17 AM

2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கிஜேர். இதன் மூலம் டென்மார்க்கில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையை விக்டோரியா கிஜேர் பெற்றுள்ளார்.

1 / 52024

2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்  டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கிஜேர். இதன் மூலம் டென்மார்க்கில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையை விக்டோரியா கிஜேர் பெற்றுள்ளார். அதே நேரத்தில், மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற விக்டோரியா கிஜேருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

2 / 5

2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. இதில் தாய்லாந்து, மெக்சிகோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல அழகிகள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக நடந்த போட்டியில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கேயர் தெல்விக் என்பவர் உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இவருக்கு வெற்றி மகுடத்தை ஷெய்னிஸ் பலாசியோஸ் சூடினார். இதன் மூலம் 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக விக்டோரியா கேயர் தெல்விக் தேர்வு செய்யப்பட்டார். மேலும், டென்மார்க் நாட்டில் உலக அழகி பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெறுகிறார் விக்டோரியா.

3 / 5

இதைத் தொடர்ந்து, மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், தாய்லாந்ததை சேர்ந்த சுசாடா சுவாங்கிரி நான்காம் இடத்தையும், வெனிசுலாவைச் சேர்ந்த இலியானா மார்க்கஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர். உலக அழக போட்டியில் அடுத்தடுத்த இடங்களை வென்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

4 / 5

2024ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற விக்டோரியா டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். இவர் டென்மார்க்கில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். வணிகம் மற்றும் விளம்பர பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் மிஸ் டென்மார்க் அழகி போட்டியில் முதலில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் டாப் 20 இடங்களை பிடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு தற்போது உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

5 / 5

இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், உலக அழகி பட்டம் வென்றதும் விக்டோரியா பூரிப்பில் திளைத்தார். மேலும், மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அதே நேரத்தில் மேடையில் முகம் நிறைந்த புன்னகையோடு இருந்தார். இவருக்கு மேடையில் இருந்த சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதே நேரத்தில் உலகி அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரியா சிங்கா போட்டியிட்டார். இவர் முதல் 12 இடங்களில் கூட வரவில்லை. அதாவது, ஆரம்பச் சுற்றுகளில் அசத்தினாலும், இறுதிச் சுற்றில் இந்தியா முதல் 12 இடங்களில் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!