Trump Shot Video: டிரம்ப் சுடப்பட்டபோது என்ன நடந்தது? திக் திக் நிமிடங்கள்.. பரபர வீடியோ!
அமெரிக்க அதிபர் டிரம்ப் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மேற்கு பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் நடந்த பேரணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பேரணியில் ஏழு நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது. இது சம்பந்தமான வீடியோவில் இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். பேரணியில் டிரம்ப் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
வீடியோ: அமெரிக்க அதிபர் டிரம்ப் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மேற்கு பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் நடந்த பேரணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பேரணியில் ஏழு நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது. இது சம்பந்தமான வீடியோவில் இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். பேரணியில் டிரம்ப் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குண்டடி பட்டதும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரம்ப் தனது முன் இருந்த மைக் மேடையின் கீழே குனிந்து தன்னை தற்காத்துக் கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து டிரம்ப் பத்திரமாக மீட்டனர். அப்போது டிரம்ப் மேடையிலேயே கைகளை உயர்த்தி காட்டினார். இது பெரிதும் கவனம் பெற்றது. பின்னர், அங்கிருந்து பாதுகாவலர்கள் அவரை சுற்றி வளைத்து மேடையில் இருந்து அழைத்து செல்வது போன்று வீடியோ காட்சிகள் உள்ளன.
Trump got shot in the side of the head at his rally in Pennsylvania pic.twitter.com/5xtwgRscOr
— Hodgetwins (@hodgetwins) July 13, 2024
தற்போது டிரம்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரம்பிற்கு காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்து. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கப்படும் என்று அமெரிக்க ரகசிய சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
Also Read: இங்கு சிரிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்.. ஜப்பானின் புதிய விதி.. முழு விவரம் இதோ!
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். டிரம்ப் ஏற்கனவே அதிபர் தேர்தலில் முன்னிலையில் இருக்கிறார். இப்படியான சூழலில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனம்:
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு தகவல் வந்தது. அவர் பாதுகாப்பாக நலமாகவும் இருக்கிறார். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. நாம் அனைவரும் ஒரு நாடாக இணைந்து இந்த சம்பவத்திற்கு கண்டிக்க வேண்டும்” என்றார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில், “பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவருக்குப் பலத்த காயம் ஏற்படாததால் நாங்கள் நிம்மதியடைந்தோம். அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும்,துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க ரகசிய சேவை பிரிவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது போன்ற வன்முறைகளுக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நமது பங்களிப்பைச் உறுதி வேண்டும்” என்றார்.
முன்னாள் அதிபர் ஒபாமா கூறுகையில், “நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும் முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய காயம் அடையவில்லை என்பதில் நான் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். டிரம்ப் விரையில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
Also Read: டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு.. பேரணியில் பயங்கரம்.. அமெரிக்காவில் உச்சகட்ட பரபரப்பு