Vietnam Flood : வியட்நாம் வெள்ளம்.. பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு!

Natural Disaster | வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வியட்நாமில் உருவாகிய "டைஃபூன் யாகி" புயலால் அங்கு பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வியட்நாமின் வடக்கு பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டைஃபூன் யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அங்கு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

Vietnam Flood : வியட்நாம் வெள்ளம்.. பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு!

வியட்நாம் வெள்ள பாதிப்பு

Published: 

10 Sep 2024 19:52 PM

வியட்நாம் வெள்ளம் : வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வியட்நாமில் உருவாகிய “டைஃபூன் யாகி” புயலால் அங்கு பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வியட்நாமின் வடக்கு பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டைஃபூன் யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அங்கு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி அங்கு இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Farmer ID Card : ஆதார் கார்டை போலவே விவசாயிகளுக்கு அடையாள அட்டை.. வெளியான முக்கிய தகவல்!

டைஃபூன் யாகி புயலில் சிக்கி 82 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் உருவான டைஃபூன் யாகி புயல் காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 64 பேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆசியாவில் இந்த ஆண்டு உருவான புயல்களில் இந்த டைஃபூன் யாகி மிகவும் அபாயகரமானதாக இருந்ததாக அரசு அதிகாரிகள் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர். வியட்நாமில் நிலச்சரிவுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தண்ணீரில் அடித்துச் சென்றும் மண்ணில் புதைந்தும் பலர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 752 பேர் படுகாயம் அடைந்துள்ளதால மீட்புக் குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடுமையாக சேதமடைந்த ஆப்பிள் மற்றும் சேம்சங் நிறுவனங்கள்

இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் வியட்நாமின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் மற்றும் சேம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அதாவது கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையின் தொடர்ச்சியாக இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாமில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வியட்நாமின் தெற்கு பகுதியில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரையோரம் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Electric Vehicle : இ காமர்ஸ் நிறுவனங்களை மின்சார வாகனம் பயன்படுத்த கூறும் வாடிக்கையாளர்கள்.. ஏன் தெரியுமா?

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 30 ஆண்டுகள் பழமையான பாலம்

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி வியட்நாமின் சிவப்பு நதியில் அமைக்கப்பட்டிருந்த 30 ஆண்டுகால பழமையான பாலமும் இந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த சம்பத்தில் 8 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக மற்ற பாலங்களை பிளாக் செய்து, குறைந்த அளவு மக்களை மட்டுமே அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவப்பு நதியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பெருக்கி மூலம் பொதுமக்களை எச்சரிக்கும் அதிகாரிகள்

வியட்நாமில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஒளிப்பெருக்கிகள் மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க சுமார் 4,600 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Thol Thirumavalavan: அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்.. திமுக கொடுத்த ரியாக்‌ஷன்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 வீடுகள்

இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 1,48,600 ஹெக்டேர் அதாவது வியட்நாமின் 7% விலைநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சுமார் 50,000 வீடுகளும் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!