Nigeria: நைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்து.. பெட்ரோல் எடுக்க சென்ற 94 பேர் பலியான பரிதாபம்!
மதியா நகரில் இருந்து குறுக்கே ஒரு லாரி வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் முயன்ற போது பெட்ரோல் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த பெட்ரோல் கீழே கொட்ட தொடங்கியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஆர்வமாக பெட்ரோலை சேமிப்பதில் குறியாக இருந்த நிலையில், கூட்டம் கூடியதால் எழுந்த அதீத வெப்பம் எழுந்துள்ளது.
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறிய விபத்தில் 90க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடக்கு பகுதியில் நேற்று மதியம் வடக்கு ஜிவாகா நகரில் இருந்து பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது மதியா நகரில் இருந்து குறுக்கே ஒரு லாரி வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் முயன்ற போது பெட்ரோல் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த பெட்ரோல் கீழே கொட்ட தொடங்கியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஆர்வமாக பெட்ரோலை சேமிப்பதில் குறியாக இருந்த நிலையில், கூட்டம் கூடியதால் எழுந்த அதீத வெப்பம் காரணமாக திடீரென கீழே கொட்டிய பெட்ரோலில் தீப்பிடித்து டேங்கர் லாரி வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் இதுவரை 94 பேர் உயிரிழந்ததாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் காவல்துறை செய்தி தொடர்பாளர் லாவன் சிஷூ ஆடம் கவலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து டேங்கர் லாரியில் இருந்த எரிபொருளை சேகரிக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் வாகனத்தை சுற்றி குவிந்ததால் விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
94 personnes périssent dans l’explosion d’un camion-citerne, le 15 octobre dans l’État de Jigawa, au nord du #Nigeria.
Selon la police,renversé suite à un accident, il a explosé alors que des habitants récupéraient du carburant déversé sur la route. pic.twitter.com/wGtOh5nqWS
— Lamine224Balde (@MLamineBalde) October 16, 2024
பெட்ரோல் எடுப்பதை தடுக்க முயன்ற அதிகாரிகளையும் பொதுமக்கள் பொருட்படுத்தாமல் இந்த செயலில் ஈடுபட்டதால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டதாக ஆடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Also Read: Instagram : “Profile Card” அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
ஆப்பிரிக்க நாட்டில் டேங்கர் லாரி வெடிப்புகள் என்பது சகஜமாக நடைபெறும் ஒன்றாகும். அங்குள்ள சாலைகள் மோசமாக பராமரிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறை எரிபொருள் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் விபத்துகளை சந்திக்கும். அப்போதெல்லாம் அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் எரிபொருளை சேகரிப்பும் செயலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதால் டேங்கர் லாரி திடீரென தீ பிடித்தது இந்த விபத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எலிபர்கள் எடுத்துச் சொல்லப்படுது குறிப்பிடத்தக்கது