5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Asteroid: பூமியை தாக்க வரும் ஆபத்து நிறைந்த விண்கல்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!

Nasa - Asteroid: இதுவரை மனிதர்களால் கண்டறியப்ப டாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடங்களில் துல்லியமாக 2038-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது நாசாவின் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.

Asteroid: பூமியை தாக்க வரும் ஆபத்து நிறைந்த விண்கல்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 24 Jun 2024 15:45 PM

பூமியை தாக்க வரும் விண்கல்: பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக் கூடும் என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று பூமியைத் தாக்க 72 சத வீத சதவீத வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாசா தலைமையில், மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. பூமிக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

பூமியை சுற்றி தினசரி பல்வேறு வானியல் நிகழ்வுகள் நடக்கிறது. சந்திர கிரகணம், சூரிய கிரகணம், பிற் கோள்கள் பூமிக்கு நெருக்கமாக வருவது போன்றவ மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இவற்றை தவிர வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கொண்டு கடலில் உருவாகும் புயல் பற்றி கண்காணிப்பது, தொலை தொடர்பு வசதிகள் ஆகியவை சாத்தியமாகிறது. விண்வெஇ ஆராய்ச்சியாளர்கள் பூமி மற்றும் அதனை சுற்றி நடக்கும் பல்வேறு முக்கியமான விஷயங்களை தொடர்ச்சியாக கண்காணித்து மக்களிடம் அவற்றை கொண்டு சேர்க்கின்றனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பூமி மற்றும் பிற கிரகங்கள் பற்றி தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வானியல் நிகழ்வுகள், சிறுகோள்கள், பூமியை சூற்றி நடக்கும் விஷயங்கள், பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் பிதுவரை கண்டுப்பிடிக்கப்படாத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் இது பேராபத்தை விளைவிக்கும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Also Read: ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை

இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்ப டாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடங்களில் துல்லியமாக 2038-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது நாசாவின் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க இன்பிரா ரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தொலைநோக்கியை நாசா ஜூன் 2038 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Also Read: 40 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடம் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. காரணங்களை அடுக்கிய மருத்துவர்கள்..!