Nepal Floods: நேபாளத்தை புரட்டி போட்ட கனமழை.. மூழ்கிய காத்மாண்டு.. 170-ஐ தாண்டிய உயிரிழப்பு!
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 170 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேபாளத்தில் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 170 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காணாமல் போயுள்ளனர்.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 170 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேபாளத்தில் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 170 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காணாமல் போயுள்ளனர். கடந்த 27ஆம் தேதி முதல் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரும் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் என அனைத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 40-45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு கனமழை பெய்துள்ளது. இதனால், காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நேபாள வெள்ளத்தில் சிக்கி 170 பேர் பலி:
நேபாளத்தில் நிலச்சரவு, வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலரது உடல் மண்ணுக்குள் புதைத்துள்ளன. அதோடு, சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால், நேபாள ராணுவம் மற்றும் ஆயுதப்படை போலீசாரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்களை காத்மாண்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 111 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
#WATCH | Nepal Floods | Death toll rises to 170 after torrential rainfall-induced landslide and flooding sweeps across the country: Home Ministry
Rescue operations underway pic.twitter.com/diJ0kGCFhk
— ANI (@ANI) September 29, 2024
அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,000 பேர் நேபாள ராணுவம், நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடரும் மீட்பு பணிகள்:
மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அனைத்து நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே இருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நெடுஞ்சாலைகளில் சிக்கித் தவித்த நிலையில், நேற்று முதல் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் குறைந்தது 322 வீடுகள் மற்றும் 16 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்தன. மேலும், மக்களை மீட்க 20,000 பாதுகாப்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டு பள்ளத்தாக்கில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு இதுபோன்ற வெள்ள பாதிப்பு கடந்த 40 முதல் 45 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
#WATCH | Nepal Floods | Death toll rises to 170 after torrential rainfall-induced landslide and flooding sweeps across the country: Home Ministry
(Drone visuals from Dhading in Nepal) pic.twitter.com/auV1JrdaLG
— ANI (@ANI) September 29, 2024
காலநிலை மாற்றம்:
உலக நாடுகளில் காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகள், பொருளாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அதிக அளவில் மழை பொழிவதற்கும், இயல்பை விட வெயில் அதிகமாக இருப்பதற்கும் காலநிலை மாற்றமே காரணம். கடந்தாண்டு, இந்தாண்டு தொடகத்தில் இருந்தே பல நாடுகள் சந்திக்காத காலநிலை பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.
Also Read: அடடே..! இன்று முதல் பூமியில் இரண்டு நிலவுகள் தோன்றும்.. இதனை எப்படி பார்ப்பது?
குறிப்பாக நம் இந்தியாவிலேயே பல்வேறு பிரச்னைகள் இந்த ஆண்டு நடந்தன. கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நாட்டையே உலுக்கியது. வரும் மாதங்களில் மழைக்காலம் என்பதால், இன்னும் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.