News9 Global Summit: “உலகையே பாதிப்பது இந்த 2 விஷயம் தான்” நியூஸ்9 உச்சி மாநாட்டில் சிஇஓ பாருன் தாஸ் பேச்சு
News9 Global Summit Germany : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூஸ்9 குலோபல் உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பாருன் தாஸ் உரையாற்றினார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூஸ்9 குலோபல் உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு தொடங்கியது. இந்த உச்ச மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். நியூஸ்9 குலோபல் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பாருன் தாஸ் உரையாற்றினார். பருவநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து முக்கியமான விஷயங்களைக் சிஇஓ பாருன் தாஸ் கூறினார். நியூஸ்9 குளோபல் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் கடுமையான குளிர்காலத்தில் அதிகாலையில் வந்த விருந்தினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
2வது நாளாக தொடங்கியது நியூஸ்9 உச்சி மாநாடு
மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு பருண் தாஸ் நன்றி தெரிவித்தார். இந்தியா, ஜெர்மனி போன்ற இரண்டு பெரிய நாடுகள் முழு அரவணைப்புடன் இருதரப்பு ஒத்துழைப்பை எவ்வாறு பின்பற்றுகின்றன என்பதை இரு அமைச்சர்களின் உரைகளும் காட்டுவதாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது உரையில் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்ததாக பருண் தாஸ் கூறினார். இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான உறவில் நம்பிக்கை, இலட்சியங்கள் இருப்பதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
உலக அளவில் நம்பிக்கை, திறமை மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குவதில் இந்தியா அறியப்படுகிறது என்றும் அஸ்வனி வைஷ்ணவ் கூறினார். இன்று, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே திறன் பரிமாற்றம் இன்னும் பொருத்தமானதாகிவிட்டது என்றார்.
பருண் தாஸ் தனது உரையில், இன்றைய அமர்வில், உலக அரங்கில் இந்தியா இறுதியாக எவ்வாறு வளர்ந்த நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். இந்தியாவின் நிலையான வளர்ச்சியில் ஜெர்மனி எவ்வாறு வலுவான பங்களிப்பை அளித்துள்ளது என்பது போன்ற தலைப்புகளும் மாநாட்டின் இரண்டாவது நாளில் விரிவாக விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Also Read : News9 உச்சி மாநாடு.. இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
நியூஸ்9 சிஇஓ பாருன் தாஸ் உரை
மேலும், அவர் பேசுகையில், “நியூஸ்9 குளோபல் உச்சி மாநாட்டில் நடந்து வரும் விவாதங்கள் உலக அரங்கில் இந்தியாவையும் ஜெர்மனியையும் ஒரு அர்த்தமுள்ள நோக்கத்துடன் முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பூமி மற்றும் சுற்றுச்சூழலின் நலன் சார்ந்ததாக இருக்கும்” என்றார்.
இதனுடன், தனது உரையில், பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய விஷயங்களையும் பருண் தாஸ் கூறினார். அதாவது, ” இன்று இரண்டு முக்கியமான விஷயங்கள் உலகை வேகமாகப் பாதிக்கின்றன. ஒன்று காலநிலை மாற்றம் மற்றொன்று செயற்கை நுண்ணறிவு. உலகின் இருபெரும் நாடுகளான இந்தியாவும் ஜெர்மனியும் இந்த திசையில் நேர்மறையான முயற்சிகளுடன் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று நாம் அனைவரும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார். முழு உலகமும் காலநிலை மாற்றத்தின் பிடியில் உள்ளது. இன்று, இந்த தளத்திலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பாக ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க முடியும். பருவநிலை மாற்றம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்றார்.
சென்னை வெள்ளத்தில் இருந்து ஸ்பெயினின் வலென்சியா வரை, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து அனைவருக்கும் தெரியும் என்று பருன் தாஸ் கூறினார். பருவநிலை மாற்றத்திற்கு யார் பொறுப்பு என்பது பெரிய கேள்வியாக உள்ளது” என்று பருன் தாஸ் கூறினார்.
Also Read : இன்று ஜெர்மனியில் தொடங்கும் News9 உச்சி மாநாடு.. நிகழ்ச்சி நிரல் இதோ!
இந்தியா – ஜெர்மனி உறவு
மேலும், ”விபா தவான் மற்றும் அஜய் மாத்தூர் போன்ற எங்கள் அதிகாரிகள் ஐக்கிய நாடுகளில் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.
இன்று பருவநிலை மாற்றத்தின் பேரழிவு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் பாதித்துள்ளது என்றார். இந்தக் கண்ணோட்டத்தில், இன்றைய அமர்வில் ஜெர்மனியின் மத்திய உணவு மற்றும் வேளாண் அமைச்சர்கள் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களை உச்சிமாநாட்டிற்கு வரவேற்கிறோம்.
பருவநிலை மாற்றம் தவிர, செயற்கை நுண்ணறிவின் நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்தும் பாருன் தாஸ் விவாதித்தார். செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது என்றார். இந்தியா தொழில்நுட்பத் துறையில் தனது சாதனையை நிரூபிக்க விரும்புகிறது. நாடு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பாதையில் உள்ளது.
உலக நிறுவனங்கள் இந்தியாவையே நோக்குகின்றன. இந்தியா அவர்களுக்கு வலுவான தேர்வாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த உச்சிமாநாட்டில், வேகமான பொருளாதாரம் கொண்ட நாடாக உலக அரங்கில் முத்திரை பதித்து வரும் இந்தியா பற்றியும் பேசுவோம்” என்றார்.