News9 Global Summit: விவசாயத்தில் AI தொழில்நுட்பம்.. ஜெர்மனி அமைச்சர் பகிர்ந்த சூப்பர் தகவல்!
செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் விவசாயத் துறையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து பேசினார். AI மூலம் இந்தியா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் விவசாயத் துறையில் ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய-ஜெர்மன் உறவில் அவர் என்னென்ன விஷயங்களை பேசினார் என்பது பற்றி காணலாம்.
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான டிவி9 ஏற்பாடு செய்த நியூஸ்9 குளோபல் உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் பல்வேறு விதமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றது. இதில் ஒரு அமர்வில் பேசிய ஜெர்மனியின் உணவு மற்றும் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டெமிர் (Cem Ozdemir) விவசாயத்தில் ஏஐ தொழில்நுட்பம் குறித்த பல்வேறு தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் விவசாயத் துறையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து பேசினார். AI மூலம் இந்தியா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் விவசாயத் துறையில் ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய-ஜெர்மன் உறவில் அவர் என்னென்ன விஷயங்களை பேசினார் என்பது பற்றி காணலாம்.
விவசாயத்தில் முன்னேற்றம்
ஜெர்மனியின் உணவு மற்றும் வேளாண் அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கூறுகையில், “இந்தியா உலகில் பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியா தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இருந்தும் வரும்கிறது. தவிர, பல துறைகளிலும் ஒருவருக்கொருவர் நல்ல ஒத்துழைத்து அளித்து வருகின்றனர். வரும் நாட்களில் இந்தியாவும் ஜெர்மனியும் இன்னும் பல துறைகளில் ஒத்துழைப்பு நல்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் பற்றி பேசுகையில், இரு நாடுகளும் விவசாயத் துறையில் இதைப் பயன்படுத்தலாம் என்று கூறினார். இதனால், இந்தத் துறை அதிக அளவில் பயனடையும். இரு நாடுகளுக்கும் இடையே விவசாய வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இருக்க வேண்டும். இரண்டு பெரிய நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமானது. மறுபுறம்,இந்தியாவும் ஜெர்மனியும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க முடியும். அதனால் காலநிலை தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க முடியும்” என தெரிவித்தார். உரங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் பசுமை ஹைட்ரஜனைப் பற்றி பேசிய அவர், இதன் உற்பத்தியில் இந்தியா மிகுந்த பங்களிப்பு கொண்டுள்ளது என்று கூறினார். இது தவிர, ஜெர்மனி குடியேற்றத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு விசா வழங்குவது, இரு நாடுகளுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் செம் ஓஸ்டெமிர் தெரிவித்துள்ளார்.
செம் ஓஸ்டெமிர் (Cem Ozdemir) யார் தெரியுமா?
செம் ஓஸ்டெமிர் அடிப்படையில் ஒரு ஆசிரியராவார். இவர் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி Bad Urach நகரில் பிறந்தார். அவர் 1994 இல் ஜெர்மனியின் ருட்லிங்கனில் உள்ள சமூக விவகாரங்களுக்கான புராட்டஸ்டன்ட் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூக கல்வியில் பட்டம் பெற்றார். முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு அவர் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஜெர்மன் பசுமைக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் உறுப்பினர் என்ற பெருமையப் பெற்றார்.
2004 முதல் 2009 வரை, ஓஸ்டெமிர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதேசமயம் அவர் தனது அரசியல் குழுவின் வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார். 2008 மற்றும் ஜனவரி 2018 க்கு இடையில், அவர் தனது கட்சியின் தலைவராக பணியாற்றினார். 2017 பொதுத் தேர்தலில் ஜெர்மன் பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளர் இரட்டையரில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ஜெர்மன் பன்டேஸ்டாக்கில் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கான குழுவின் தலைவராக பணியாற்றினார்.
அவர் 2021 பொதுத் தேர்தலில் ஸ்டட்கார்ட் I தொகுதியில் ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டிசம்பர் 2021 முதல் மத்திய உணவு மற்றும் வேளாண் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் மத்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.