5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

News9 Global Summit: News9 உச்சி மாநாடு.. இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

News9 Global Summit Germany : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூஸ்9 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய நியூஸ்9 உச்சி மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல துறைந்த முன்னணி பிரபலங்கள் என பலரும் கலந்து கொன்டனர்.

News9 Global Summit: News9 உச்சி மாநாடு.. இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
நியூஸ்9 உச்சி மாநாடு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Nov 2024 12:13 PM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூஸ்9 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய நியூஸ்9 உச்சி மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல துறைந்த முன்னணி பிரபலங்கள் என பலரும் கலந்து கொன்டனர். ஜெர்மனியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்டட்கார்ட் மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி உச்ச மாநாட்டில் உரையாற்றுகிறார். உலகளாவிய இந்தியாவின் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

இன்றைய நிகழ்ச்சி நிரல்:

இதன் மூலம் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் இந்தியாவின் பங்கு குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் உரை நியூஸ்9 உச்ச மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், Tv9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ பருண் தாஸின் வரவேற்பு உரைக்குப் பிறகு அமர்வுகள் தொடங்கும். இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் உணவு மற்றும் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டெமிர் இந்தியா மற்றும் ஜெர்மனியின் நிலையான வளர்ச்சி குறித்து உரையாற்றுவார்.

மேலும், இவர்கள் இருநாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டு பல்வேறு விவாதங்களில் ஈடுபடுவார்கள். இது தவிர, பசுமை ஆற்றல், AI, டிஜிட்டல் பொருளாதார திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் மாலை வரை பங்கேற்பார்கள்.

Also Read : தொடங்கியது News9 உச்சி மாநாடு.. இந்தியா- ஜெர்மனி உறவுகளுக்கான வரலாற்று மைல்கல் – நிர்வாக இயக்குனர் பாருன் தாஸ்

பிரதமர் மோடி பங்கேற்பு

பசுமை ஆற்றல் குறித்து ஃப்ரான்ஹோஃபரின் இயக்குனர் ஆண்ட்ரியாஸ் பேட், சர்வதேச சோலார் அலையன்ஸின் அஜய் மாத்தூர், TERI இன் டிஜி விபா தவான், ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜியின் சிஎம்டி ராகுல் முன்ஜால் ஆகியோர் பேசுவார்கள்.

மேலும், ஏஐ தொழில்நுட்பம் குறித்து குளோபல் இண்டஸ்ட்ரி செக்டார் லீட் சப்ளையர் ஸ்டீபன், AI மொழி தொழில்நுட்பத்தின் தலைவர் டாக்டர் ஜான் நீஹுயிஸ், டெக் மஹிந்திரா ஐரோப்பாவின் தலைவர் ஹர்ஷுல் அன்சானி, இந்தியாவின் மைக்ரான் எம்.டி ஆனந்த் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துரையாடுவார்கள்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மாலை 4.30 மணிக்கு உரையாற்ற உள்ளார். India: Inside the Global Bright Spot என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். இது தவிர, போர்ஸ், மாருதி, சுசூகி, மெர்சிடிஸ் பென்ஸ், பாரத் போர்ஸ், இந்தியா மற்றும் ஜெர்மனியின் பல வணிக நிறுவனங்கள், இந்தோ ஜெர்மன் சேம்பர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ASSOCHAM போன்ற வர்த்தக மற்றும் வர்த்தக சங்கங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.

நேற்றைய நிகழ்வில் டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பாருன் பேசினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பேசினார். அதன்படி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “2024ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 96.8 கோடி பேர் வாக்களித்தனர்.

Also Read : இன்று ஜெர்மனியில் தொடங்கும் News9 உச்சி மாநாடு.. நிகழ்ச்சி நிரல் இதோ!

மத்திய அமைச்சர் பேசியது என்ன?

சுமார் 750 அரசியல் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. உலகில் எங்குமே இவ்வளவு பெரிய அளவில் ஜனநாயக தேர்தல் நடந்ததில்லை. இதுவே மிகப்பெரிய தேர்தல்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா வெறும் 5 மணி நேரத்தில் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் முடிவுகள், தொகுதி வாரியான வேட்பாளர்களின் தரவுகள், வாக்கு சதவீதம், கட்சி விவரம் போன்றவை வெளியாகின. இது இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

கோவிட் போன்ற தொற்றுநோய்களின் போது உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. உலகின் பல பெரிய நாடுகள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக நுகர்வு அதாவது செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்திய அந்த சமயத்தில், இந்தியா மட்டும் முதலீட்டுப் பாதையைத் தேர்ந்தெடுத்தது.

இது இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியது. இந்திய அரசாங்கம் உள்கட்டமைப்பில் மட்டுமல்ல, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிலும் முதலீடு செய்துள்ளது. முதலீட்டில் இந்தியா கவனம் செலுத்துவதால், இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது”  என்றார்.

 

Latest News