5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

News9 Global Summit: இந்தியா – ஜெர்மனி உறவு.. உச்சி மாநாட்டில் சிஇஓ பருண் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!

இன்றைய அமர்வில் அனைத்து பேச்சாளர்களும் முக்கியமான தலைப்புகளில் மிகவும் பயனுள்ள விஷயங்களைக் கூறியதாக பருண் தாஸ் கூறினார். விருந்தினர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இன்றைய விவாதங்கள் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன் எனவும் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பருண் தாஸ் பேசினார்.

News9 Global Summit: இந்தியா – ஜெர்மனி உறவு.. உச்சி மாநாட்டில் சிஇஓ பருண் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
டிவி9 நிர்வாக இயக்குனர் & சிஇஓ பருண் தாஸ்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Nov 2024 21:52 PM

நியூஸ்9 குளோபல் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் கோல்டன் பால் அமர்வைத் தொடங்கிவைத்து பேசிய டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ பருண் தாஸ், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவுகளின் ஆழத்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து எதிர்காலத்தில் உலகில் ஒரு புதிய விஷயத்தை உருவாக்க முடியும் என்பதை இன்றைய அமர்வு மீண்டும் நிரூபித்துள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார். உச்சி மாநாட்டின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் ஜெர்மனியில் உள்ள Baden-Wurttemberg-ன் அமைச்சர் Winfried Kretschmann ஆகியோரை வரவேற்கும் போது, பருண் தாஸ் இதனை குறிப்பிட்டு பேசினார்.

மேலும் ஜெர்மனியின் உணவு மற்றும் விவசாய அமைச்சர் செம் ஒஸ்டெமிர் முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், இந்தியாவும் ஜெர்மனியும் எவ்வாறு ஒன்றிணைந்து நம்பிக்கையான மற்றும் நிலையான எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தினார்.இந்த நேரத்தில், பிரபல சட்ட நிபுணரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சருமான குந்தர் ஓட்டிங்கரின் பார்வை டிஜிட்டல் எதிர்காலம் குறித்து மிகவும் முக்கியமானது என்றும் பருண் தாஸ் தெரிவித்தார்.

பயனுள்ள பல விஷயங்கள்

தொடர்ந்து இன்றைய அமர்வில் அனைத்து பேச்சாளர்களும் முக்கியமான தலைப்புகளில் மிகவும் பயனுள்ள விஷயங்களைக் கூறியதாக பருண் தாஸ் கூறினார். விருந்தினர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இன்றைய விவாதங்கள் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ​​ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டின் அறிக்கையை குறிப்பிட்டு பேசிய பருண் தாஸ், அவரது அறிக்கை எனக்கு மிகவும் பிடித்தமானது என்றும், இது உலகின் வளர்ச்சிக்கும் மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். மேலும் ஒன்றுபடுவது ஒரு ஆரம்பம், ஒன்றாக இருப்பது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஒன்றாக வேலை செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும். ஹென்றி ஃபோர்டின் இந்த அறிக்கையை முதலில் ஜெர்மன் மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து பருண் தாஸ் விவரித்தார்.

இன்று இந்த இடத்தில் நாம் ஒற்றுமையாக இருப்பது பாக்கியம் என்று கூறிய அவர்,  Baden-Wurttemberg தொழில்முனைவோர் புதுமைகளுக்கு மட்டுமல்ல, வெளியாட்களை வரவேற்கும் அணுகுமுறைக்கும் பெயர் பெற்றவர். Baden-Wurttemberg உலகின் பொருளாதாரத்தில் ஒரு நல்ல இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, சரக்கு மற்றும் சேவைத் துறையில் நல்ல வருமானம் கிடைத்தது. Baden-Wurttemberg உழைக்கும் மக்களை பருண் தாஸ் பாராட்டினார்.

இதற்கிடையில் ​​1968 ஆம் ஆண்டு நான் பிறக்காத வேளையில், இந்தியா 20 வயதுக்குட்பட்ட இளம் தேசமாக இருந்தது, அன்றிலிருந்து, ஜெர்மனியின் பேடன்-வுர்ட்டம்பெர்க், இந்தியாவின் மகாராஷ்டிராவுடன் சிறப்பான உறவைப் பேணி வருகிறது. பேடன்-வுர்ட்டம்பெர்க் மும்பையுடன் ஒரு சகோதர  உறவை வளர்த்தார். பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பால் பல தசாப்தங்களாக வலுப்பெற்ற உறவு இதுவாகும் என பருண் தாஸ் குறிப்பிட்டு பேசினார். உதாரணமாக, இந்த காலகட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் பேடன்-வுர்ட்டம்பெர்க் உடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பருன் தாஸ் குறிப்பிட்டார். திறமையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான ஒப்பந்தம் இது என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்வு எமது உறவுகளில் மென்மேலும் வெற்றிகரமானதாக அமையும் என நம்புகின்றோம் என்றார்.

 

news9-global-summit-tv9-network-md-ceo-barun-das speech-about-indo-german-ties-at-golden-ball-session

Latest News